3. கண்ணன் பொறிவரி அரவின் ஆடிய வரலாறு (26) | காளிங்கன் என்ற ஐந்தலைப் பாம்பு யமுனையாற்றின் மடு ஒன்றில் வாழ்ந்து தன் நஞ்சினைக் கக்கி, அம் மடுவினது நீரை உண்ணுதற்கு ஏற்றதாயல்லாது செய்து வந்தது. அம்மடுவில் நீர் ஆடுதற்கு அஞ்சி மக்கள் ஒதுங்கினர். தீராத விளையாட்டுப் பிள்ளையாகிய கண்ணன், விளையாட்டாகச் சென்று மடுவின் கரையில் இருந்த கடப்ப மரம் ஒன்றின் மேலேறி, காளிங்கனின் தலைமேல் குதித்து அதனைக் கொல்லப் போகையில் அப்பாம்பின் மனைவியரின் வேண்டுகோளை ஏற்று கண்ணன் அவர்களை மடுவை விட்டேறி, கடலில் வாழுமாறு பணித்தனன். | 4. புறவொன்றின் பொருட்டாக துலைபுக்க பெருந்தகையின் | வரலாறு (243, 6471) | தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர் சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர்தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரனும், இயமனும் முறையே பருந்தாகவும், புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு'' என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து அந்தப் புறாவின் எடையளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தரின போதுமென்றது. மகிழ்ந்த சிபி புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமனடையாது புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர் தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலையுற்றன. அப்போது அத்தேவர்கள் இருவரும் தத்தம் உண்மையுருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு. | 5. கரா மலையத் தளர் கைக் கரியை அளித்த | வரலாறு (2564, 6281) | பாண்டிய குலத்து இந்திரத் துய்மன் ஒரு திருமால் பக்தன். ஒன்றிய சிந்தையனாய்த் திருமாலை வழிபடும் காலத்து |
|
|
|