சுரிகுழல் மடந்தை என்னும் தோகை, மன்னர் என்னும் மலைகளை ஆராய்ந்து பார்த்து, ஆழி வேந்தன் திருமகனாகிய விசயன் என்னும் மலையின் குவட்டைத் தான் இனிது தங்குதற்குரியதாகத் தேர்ந்து விரும்பியதென்க. சுதாரை விசயனுக்கு மாலைசூட விரும்பினாள் என்றபடி. |
(704) |
|
சுதாரை விசயனை மாலை சூட்டல் |
1835. | மாதராள் சுதாரை வாட்கண் மலரொடு மணிவண் டார்க்கும் போதுலாம் பிணையல் வீரன் பொன்வரை யகலஞ் சூழ ஏதிலா மன்னர் வாட 2விருபுடைக் கிளைஞ ரெல்லாம் காதலாற் களித்துச் செல்வக் கடிவினை முடிவித் தாரே. |
(இ - ள்.) மாதராள் சுதாரை - எழில் மிக்கவளாகிய சுதாரை என்பாளுடைய, வாட்கண் மலரொடும் - வாள் போன்ற கண்ணாகிய மலருடனே, மணி வண்டார்க்கும் - மணி நிறம் படைத்த வண்டுகள் ஆரவாரிக்கும். போது உலாம், பிணையல் - மலர் பொருந் ிய (சுதாரையாற் சூட்டப்பட்ட) மாலையும், வீரன் - விசயனுடைய, பொன்வரை அகலம் சூழ - பொன் மலையை ஒத்த மார்பிலே பொருந்தா நிற்ப, ஏதிலா மன்னர் வாட - பிறராகிய அரசர் எல்லாம் மனம் புழுங்க, இருபுடைக் கிளைஞர் எல்லாம் - இருபக்கத்தும் உளராகிய கேளிர்கள் எல்லோரும், காதலால் களித்து - அன்பாலே மகிழ்ச்சிமிக்கு, செல்வக் கடிவினை முடிவித்தார் - செல்வ மிக்க திருமண வினையை நிகழ்த்தி முற்றுவித்தார், (எ - று.) இருபுடைக் கிளைஞர் -மணமகன் மணமகளாகிய இருவருடைய உறவினர். சுதாரையின் கண் மலரோடே பிணையலும் விசயன் அகலஞ் சூழ ஏதிலா மன்னர் வாட இருபுடைக் கிளைஞர் எல்லாம் களித்து மணம் முடித்தனர் என்க. |
(705) |
|
சுதாரையும் விசயனும் காமந்துய்த்தல் |
1836. | கழல்வலம் புரிந்த நோன்றாட் கடல்வண்ணன் புதல்வன் காமர் குழல்வலம் புரிந்த 2கோதை குழைமுகம் வியர்ப்ப வேட்டான் அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங் கத்தொழின் முடித்த பின்னைத் தழல்வலம் புரிந்த வேலான் றடமுலை வாரி சார்ந்தான். |
|
|
(பாடம்) 1 விரும்புடைக், விளங்கிளைச் சுற்றமெல்லாம். 2தோகை. |