பக்கம் : 1146 | | “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள் - 110) என்பவாகலின், தனக்கு நன்மையே செய்த நல்வினையைப் புறக்கணித்துத் தீவினையே கன்றித்திரிதரும் வேந்தர் அண்ணாத்தல் செய்யா அளறு புகுவர் என்பான், “நரகங்கட்கு அரசராவார்” என்றான். அரசராதல் அந்நரகத் துன்பம் முழுதும் உரிமையுடன் நுகர்தல என்க. | (714) | | நிலையாமை நினைதல் | 1845. | சென்றநாள் பெயரு மேனுஞ் செல்வமுஞ் செருக்கு மாக்கி நின்றநா ணிலவு மேனு நெறிநின்று வருந்த வேண்டா இன்றுபோல் வாழ்து மன்றே யிப்படித் தன்றி யாங்கள் 1பொன்றுநாள் வருவ தாயின் வாழ்க்கையோர் 2பொருள தன்றே. | (இ - ள்.) சென்ற நாள் பெயரும் ஏனும் - கழிந்த நம் வாழ்நாட்கள் மீண்டும் வந்து நம்முடன் புணவர்வனவாயினும், செல்வமும் செருக்கும் ஆக்கி நின்ற நாள் - செல்வப்பேற்றையும் அதனாலாய செருக்குடை மையையும் ஒருங்கே அளித்து எஞ்சிநின்ற நம் வாழ்நாள்கள், நிலவுமேனும் - கழியாதே நிலைத்திருப்பன ஆயினும், நெறிநின்று வருந்த வேண்டா - யாம் தவநெறியிலே நின்று பொறியடக்குதல் முதலியவற்றால் வருந்தாமலே, இன்றுபோல் வாழ்தும் - இற்றைக்கு இன்ப நுகர்ந்து வாழுமாறு போலவே எப்பொழுதும் வாழ்ந்திருக்கக் கடவேம், இப்படித்தன்றி - இவ்வாறே நிலைத்தலின்றி யாங்கள் - யாம், பொன்றும் நாள் வருவதாயின் - இறந்தொழியும் நாள் ஒன்று வந்தெய்துதல் ஒருதலை ஆனால், வாழ்க்கை - இப்போது எய்தியுள்ள இந்நிலையுதலில்லாத வாழ்க்கையும், ஓர் பொருளது அன்றே - ஒரு சிறந்த பொருளாகப் போற்றற்பாலதன்றாம், எ - று.) இது யாக்கை நிலையாமை கூறிற்று. இறப்பின்றி வாழ்வோம் என்பது திண்ணமாக யாம் அறிவேமெனில், தவமாற்றி வருந்த வேண்டாம். “குடம்பை தனித் தொழியப் புட்பறக்குமாப் போலே” கணத்திடை உயிர்கழிவது கண்டும், இவ் வாழ்க்கையைப் பொருளாக மதித்துத் தவநெறிச் செல்லாமை மடமை என்றிரங்கியவாறு. | (715) | (பாடம்) 1 பொன்றி. 2 பொருளன் றென்றான். | | |
|
|