பக்கம் : 1153 | | lகூற்றத்தாற் செல்வத்திற்கூனம் எவ்வாறு நிகழும் எனலும் விடையும | 1855. | கோள்வினை பயின்ற கூற்ற வரசனாற் கொள்ளற் பால கேள்வினை பயின்ற நூலிற் கிளந்துநீ ருரைமி னென்ன 1வாள்வினை 2புரந்த தோளான் மனத்ததை யுணர்ந்து மாதோ நாள்வினை புரிந்து நங்க ளுயிர்நிறை கொள்ளு மென்றார். | (இ - ள்.) கோள்வினை பயின்ற கூற்ற அரசனால் - கொலைத் தொழில் நன்கு பயின்றுள்ள அம்மறலி என்னும் அரசனாலே, கொள்ளற்பால - கவர்ந்துகொள்ள உரியனயாவை, கேள்வினை பயின்ற நூலில் கிளந்து நீர் உரைமின் என்ன - கேட்டற்றொழிலோடு பயிலப்பட்ட மெய்ந்நூல்களினின்றும் எடுத்துக் கூறுங்கோள் என்று வினவ, வாள்வினை புரந்த தோளான் - வாளின் தொழில் வன்மையாலே உலகத்தை ஓம்பிய தோள்களை உடைய பயாபதி மன்னனின், மனத்ததை - அகத்திலுள்ள கருத்தினை, உணர்ந்துமாதோ - குறிப்பாணுணர்ந்து, நாள் வினை புரிந்து நங்கள் உயிர்நிறை கொள்ளும் என்றார் - நம் ஆயுள் முடிவுறும் நாளையும் நம் ஊழின் தன்மையையும் ஆராய்ந்து, நிற்றலையுடைய நம் உயிரை அது கவர்ந்து கொள்ளும் என்று கூறினர், (எ - று.) நாள்வினை புரிந்து - நாளையும் வினையையும் ஆராய்ந்து என்க. கூற்றம் குறுகுதல் செல்வத்திற்கு ஊனம் என்றீர். அக் கூற்றம் செல்வத்தை எவ்வாறு கவரும் எனப் பயாபதி வினவ, அச்செல்வத்தை நுகர்தற்குரிய உயிரை அக் கூற்றம் கவரும் என்று அமைச்சர் கூறினர் என்க. | (725) | | 1856. | அக் கூற்றத்தை வெல்ல உபாயங் கூறுக என்னல் சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான். | |
| ்(பாடம்) 1 வாள்வலி. 2 புரிந்த. | | |
|
|