பக்கம் : 1273 | | பயாபதி “வீடெய்த முயல்வல்“ என்றல் | 2075. | வடுவறு மாதவ னுரைப்ப 1மாண்புடை அடிகள தறவமிர் துண்ட வாற்றலான் முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன் விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே. | (இ - ள்.) வடு அறு மாதவன் - பழியில்லாத பெரிய தவத்தையுடைய அத்துறவி, உரைப்ப - இவ்வாறு கூற, விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தன் - வீசுகின்ற சுடருடைய மணியாலியன்ற முடியை அணிந்த வெற்றிமிக்க பயாபதி வேந்தன், மாண்புடை அடிகளது - மாட்சிமையுடைய அடிகளார் உரைத்தருளிய, அற அமிர்து உண்ட ஆற்றலான் - அறமாகிய அமிழ்தத்தை உண்ட வலிமை யுண்மையால், முடிவு கொள் உலகு எய்த - வீட்டுலகத்தினை அடைதற்கு, முயல்வன் என்றனன் - அடியேன் முயலத் துணிந்தேன் என்று இயம்பினான், (எ - று.) வடுவறு மாதவன் என்றார், அத்துறவி நல்லாசிரியராந்தன்மையுடையர் என்பது தோன்ற, பயாபதியும் தான் மேற்கொண்ட செயலைக் கடைப்பிடித்து நின்றொழுகும் நன்மாணாக்கனே என்பது தோன்ற “வென்றி வேந்தன்“ என்றார். | ( 7 ) | அமைச்சர் பயாபதிக்குக் கூறல் | 2076. | மிக்கெழு போதிகை விலக்க றக்கதன் றொக்கநன் றுடன்பட லுலக 1மேன்றெனத் தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன் தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார். | (இ - ள்.) உலகம் ஏன்று - மன்னன் கருத்தை உலகினர் ஏற்றுக் கொண்டு, ஒக்க - பொருந்த, உடன்படல் நன்று - இசைதல் நன்றாம், என என்று கருதி, தவத்தரசன் - அத்துறவிப் பெரியோன், மிக்கு எழு - விரைந்து எழுக, போதி - அந்நெறியிலே செல், விலக்கல் தக்கது அன்று - உன் செலவைத் தடுத்தல் யார்க்கும் தகுதியாவ தொன்றன்று, என - என்று, தக்க வாய்மொழி - அச் செவ்விக்கேற்ற மெய்ம் மொழிகளைக், கூற, நேர்ந்திலன் - முன்வந்தானில்லை, தொக்கவான் புகழவற்கு - திரண்ட பெரும்புகழுடைய பயாபதி மன்னனுக்கு, அமைச்சர் சொல்லினார் - அமைச்சர்கள் பின்வருமாறு கூறுவாராயினர், (எ - று.) | |
| (பாடம்) 1 மன்னவன். 2 மென்றெனத். | | |
|
|