பக்கம் எண் :

பக்கம் : 167
 
அந்நாள் முதலியவற்றை அடியில் வருமாறு காண்க.

    
மாதம் நட்சத்திரம் பெயர் பலன
சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாதி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
தை
மாசி
சித்திரை
விசாகம்
கேட்டை
பூராடம்
திருவோணம்
பூரட்டாதி
அசுவினி
கிருத்திகை
மிருகசீரிடம்
புஷ்ய
மகம்

அட்டமகாப்ராதி ஹார்ய விபூதி
ஜிநதர்சனம்
சதுர்விம்சதி தீர்த்தகரர்
தர்ம ஸந்ததி வர்த்தநம்
நந்த்யா வர்த்தம்
ஆர்யா வர்த்தம்
சதுர் விம்சதி ஸ்தவநம்
அலங்காரம்
புத்ரவர்த்தநம்
பஞ்சாலங்காரம்
தநவர்த்தநம்

 

1000
1200
1400
1600
1800
40,000
60,000
78,000
108,000
36,02,000
60,00,000

 மேற்குறித்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதத்திற் பௌர்ணமி திதியோடு கூடியிருத்தல்
பெரும்பான்மை.

பங்குனி மாதம் முதல் மூன்று ஆண்டும் மூன்று திங்களும் இடை விடாமல்
நோற்கவேண்டும். இவ்வாறு திங்களெல்லாம்கூட முப்பத்தொன்பது நோன்பாகும்.

இப்படி நோற்கையில், உலககுருவான அருகக்கடவுளுக்கு நூற்றெட்டுக் கலசங்களினால்
விதிமுறைப்படி திருமுழுக்காட்டிப் பேரமுது படைத்துப் பார்ச்வ பட்டாரகர்க்குப்
பூசைசெய்து கௌதம கணதரருடைய நாமோத்தேசஞ் செய்து அர்ச்சனை பண்ணவேண்டும். நோற்பித்த ஆசார்யரை அருச்சித்து உணவு முதலியன கொடுக்கவேண்டும். ஆகமத்திற்கு
வழிபாடு செய்ய வேண்டும். இருடிகட்கும் ஆர்யாங்கனைகட்கும் பிரமசாரிகட்கும் ஆடை
கொடுக்க வேண்டும். மற்றவர்கட்கு இயன்ற அளவு தான தருமங்கள் செய்ய வேண்டும்.

நோன்புநாளில் தேவபூசை பண்ண வேண்டும். அடுத்த நாளில் தேவபூசை, புத்தக பூசை
புராணிக பூசை, ஜாவக பூசை, கதா சிரவணம், குருபூசை, தானம் முதலியன செய்தபின்பு
உணவுகொள்ள வேண்டும். இவ்வாறு நோற்று முடித்தவர் இப்பிறப்பு மறுபிறப்புக்களில்
வேண்டிய இன்பங்களைப் பெற்றுத் துறக்க வீடுகள் சேர்வர்.

இந்த நோன்புகளுள் ஏதாவது ஒரு நோன்பு தவறினால் ஆசாரிய ரிடத்தில் கழுவாய்
செய்துகொள்ள வேண்டும், பெண்களானால், தாய் தந்தை கணவன் அண்ணன் தம்பி
இவர்களில் ஒருவரிடம் கழுவாய் செய்துகொள்ள வேண்டும்.