| பக்கம் : 452 | | | | திருவிழாவையுடைய, தெருதுற்றபின் - அந்நகரத்துத் தெருவை அத்தூதர்கள் எய்தினபின்னர் ஆண்டெழும், சீர் இமிழால் - சிறந்த இசைப்பாடலைக் கேட்டலாலே, சென்று பொலிவு எய்தினர் - அத்தெருவினூடே சென்று மகிழ்ச்சியால் விளங்கினர், (எ - று.) விம்மி - விம்ம. முழவு விம்ம முகில் முரன்று எழும் என்க. சீர் இமிழ் - சீரமைந்த இசைப்பாடல். மயில் ஆலுவனவாகிய தெரு. விழவினையுடைய தெரு என்று தனித்தனி கூட்டுக. | | ( 81 ) | | இதுவுமது | | 654. | சூளிகை சூடிய சூல விலைத்தலை மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின் னீளிய நீரரு வித்திரள் வீழ்வன காளைக டாதைந கர்ப்பல கண்டார். | | (இ - ள்.) சூளிகை சூடிய சூலம் இலைத்தலை - அரமியங்களின் உச்சியில் சூட்டிய சூலங்களின் கூர்மையுள்ள இலை நுனிகள், மாளிகைமேன் மழைமாமுகில் போழ்தலின் - மாளிகைகளின்மேற்றவழும் மழைபெய்தற்குக் காரணமான பெரிய மேகங்களைப் பிளத்தலாலே, நீளிய நீர் அருவித்திரள் வீழ்வன - நீண்ட நீராலாய அருவிகள் வீழ்வனவற்றை, காளைகள் தாதை நகர்ப்பல கண்டார் - காளைபோன்ற விசயதிவிட்டர்களின் தந்தையாகிய பயாபதி அரசனுடைய போதனமா நகரத்தே பற்பல விடங்களில் அத்தூதுவர் கண்டு சென்றனர், (எ - று.) விசும்பிலியங்கும் முகில்களைப் போதன நகரத்துள்ள மாளிகையின் சிகரங்கள் கிழித்தலாலே அம்முகில்கள் பற்பல இடங்களில் நீரை அருவியாகப் பொழிந்தன என்க. | | ( 82 ) | | இதுவுமது | | 655. | கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு மூடு செலற்கரி தாயிட ருற்றார். | | (இ - ள்.) கூடுநர் கோவை மணிக்கலை உக்கவும் - தம்முட் கூடிய காதலர்கள் ஆற்றிய கலவிப்போரின்கண் அற்றுதிர்ந்த மணிமேகலை முதலியவும், ஊடினர் சிந்திய ஒண்சுடர் மாலையும் - கணவரோடு ஊடிக்கொண்ட மகளிர்கள் சினத்தால் அறுத்து வீசிய ஒளிகாலும் மணிக்கலன் களும், மூரி நெடுந்தெரு மூடிய ஒப்பவும் - பெரிய நீண்ட தெருக்கள் மூடப்பட்டனவாய்த் தம்முள் ஒன்றை ஒன்று ஒத்துக்கிடத்தலால், ஊடு செலற்கரிதாய் இடருற்றார் - அத்தெருக்களினூடே வழிபெற்றுச் செல்லமாட்டாது அத்தூதர்கள் வருந்துவாராயினர், (எ - று.) | | |
|
|