பக்கம் எண் :


 சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 101


 

     (இ-ள்.)  மங்கையரே  -  ஸ்திரீமார்களே, மணவாளராகுவர்  -
புருஷர்களாகவும்  பிறப்பார்கள்,  தங்கையரே  - தங்கையானவர்களே,
மறுத்து  - மீண்டு, ஆயுமாகுவர் - மாதாவாகவுமாவார்கள், அங்கவரே
- அங்கு  அப்படிப்பட்டவரே,  அடியாருமாகுவர் - (மறு சன்மத்தில்)
அடியார்களாகவுமாவார்கள், பிறவியது - ஸம்ஸாரத்தினது, இயல்பின் -
ஸ்வபாவமாகியதின்,  வண்ணம்  -  விதாயமானது, இங்கிது - இங்கே
இத்தன்மையா யிராநின்றது, எ-று.                          (72)

 213. சுற்றமும் பகையுமென் றிரண்டு மில்லையா
     மற்றிந்த வழக்கினான் மதியின் மாந்தர்கள்
     பெற்றியைப் பார்கொடா பெற்ற தொன்றிலே
     செற்றமு மார்வமுஞ் சென்று நிற்பரே.

     (இ-ள்.)   சுற்றமும்    -    உறவினரும்,   பகையுமென்று  -
சத்துருக்களுமென்று, இரண்டு - இவ்விரண்டு தன்மையும், இல்லையாம்
- நிலையாக  ஆகப்பட்டவை  இல்லையாகும், மற்று - பின்னர், இந்த
வழக்கினால்  -   இந்த   நிலையில்லாத வழக்கத்தினாலே, மதியின் -
புத்தியையுடைய,    மாந்தர்கள்   -  ஞானிகளானவர்கள்,பெற்றியை -
மேன்மைத்     தன்மையை,   பார்    -    இப்பூமியிலே, கொடா -
கொடுக்கும்படியாக,   பெற்றது  -  அடையப்பட்டதாகிய, ஒன்றிலே -
இம்மனிதப்பிறப்பொன்றிலே,  செற்றமும் - பகையினின்றும், ஆர்வமும்
- ஆசையினின்றும்,  சென்று - நீங்கி, நிற்பர் - சமத்துவ பாவனையில்
நிற்பார்கள், எ-று.                                        (73)

 214. அனந்தமாம் பிறவியு ளருந் தவனுனைப்
      புணர்ந்தவும் பகைவனா யனந்தம் போலுமா
      லனந்தமே யிவனுற வாகி வந்தவும்
      நினைந்தபின் னிதுபகை யுறவி னீர்மையே.

     (இ-ள்.) அனந்தமாம் -  முடிவில்லாதனவாய் இதுவரையிலாகிய,
பிறவியுள்  -  பிறப்புக்களில்,  அருந்தவன்  - அரிய தபத்தையுடைய
சஞ்சயந்தன்,   உனை  -  உன்னை,  பகைவனாய்  -   சத்துருவாக,
புணர்ந்தவும்   -     சேர்ந்தனவும்,    அனந்தம்      போலுமால் -
அனந்தமென்கிறதற்குச்  சமானமாகவும்  ஆகும், இவன் - இவ்வித்துத்
தந்தன், உறவாகி  வந்தவும்  - உறவினனாகி வந்தனவும், அனந்தம் -
அனந்தமாகும்,  பின்   -   பிறகு   (அதாவது அவற்றிற்குப் பிந்தின
ஜன்மமாகிய இதில்),  நினைந்த  நீ   சிந்தித்த, பகையுறவின் நீர்மை -
சத்துருத்துவமித்துருத்துவ ஸ்வபாவமானது,   இது   -  இங்குக் கூறிய
இத்தன்மையதாகும்         (அதாவது    :          நிலையில்லாத
தன்மையையுடையதாகும்), எ-று.

     ஆல், ஏ - அசைகள்.                               (74)