சண்டமது எய்தி - பத்மஷண்ட
புரத்தையடைந்து, என்வழி - என்
சம்பந்தமாக, தொக்க - சேர்ந்திராநின்ற, சுற்றமும் - பந்துக்களையும்,
ஓர் பாங்கிலே - ஒரு பக்கமாக, அழைத்து - அழைத்துக்கொண்டு,
பின் - பிற்பாடு, எ-று. (19)
243. பீடி னாற்பெயர்ந் திங்குவந் தோங்கிய
மாட மாநக ரத்திடை வாழ்க்கைமேல்
ஒடு முள்ளத்த னொண்பொருள் வைப்பிடந்
தேடு வான்சிரி பூதியை நண்ணினான்.
(இ-ள்.) பீடினால்
- பெருமையோடு, பெயர்ந்து - திரும்பி
இங்குவந்து - இந்த ஸிம்ம மஹாபுரத்தில் வந்து, (சேர்வேன் என்று)
ஓங்கிய - உன்னதமான, மாடம் -
உப்பரிகைகளையுடைய,
மாநகரத்திடை - அப்பெரிய பட்டணத்தில்,
வாழ்க்கைமேல் -
செய்யும்படியான வாழ்க்கையின்மீது (அதாவது : அவ்விடத்திலே
வசிப்பதில்), ஓடும் -
செல்லுகின்ற, உள்ளத்தன் -
மனத்தையுடையவனாய், ஒண்பொருள் - பிரகாசியாநின்ற
தனது
இரத்தினங்களை, வைப்பிடம் - வைக்கும்படியான
இடத்தை,
தேடுவான் - தேடுகின்றவனாய், சிரிபூதியை
- ஸ்ரீபூதியென்னும்
மந்திரியிடம், நண்ணினான் - அடைந்தான், எ-று.
பொருண்முடிபு நோக்கி
‘சேர்வேன் என்று" என்னுந்தொடர் இசையெச்சமாக வருவித்துரைக்கப்பட்டது.
(20)
244. மிக்க சீர்த்தியன் வேதியன் வேந்தற்குத்
தக்க மந்திரி சத்திய கோடனென்
றெக்க தைப்புரா ணஞ்சுரு திப்பொருள்
வக்க ணிப்பவன் மானவ னல்லனே.
(இ-ள்.) (அவ்வாறடைந்தவன்)
மிக்க - மிகுதியாகிய, சீர்த்தியன்
- சிறப்பையுடையவன், வேதியன் - ஜாதியில் பிராமணன், வேந்தற்கு -
அரசனுக்கு, தக்க - தகுதியாகிய, மந்திரி
- அமைச்சன்,
சத்தியகோடனென்று - சத்தியகோஷனென்று
பலராலுஞ்
சொல்லப்பெற்று, எக்கதை - எந்தக் கதைகளையும்,
புராணம் -
புராணங்களையும், சுருதிப்பொருள் -
வேதார்த்தங்களையும்,
வக்கணிப்பவன் -
வர்ணித்துச் சொல்லும்படியான
விற்பனத்தையுடையவன், மானவனல்லன் - இவன் மனித ஜன்மத்தில்
சார்ந்தவனல்லன் (தேவாம்சத்தையுடையவன்), எ-று. (21)
245. தக்க தொன்றிவன் கைப்பொருள் வைத்தலென்
றக்க ணத்தொரு பாகுட மீந்தபின்
மிக்க மாசனம் வீந்ததோர் போழ்தினிற்
றொக்க தன்கரு மஞ்சொல மற்றவன். |