சாயலுடையவர்கள்; மணியை - இரத்தினத்தை, மண்ணி
- உருவகுத்து,
அலங்காரம்பண்ணி, வைத்தனார் - வைத்ததைப் போன்றவர்கள்;
வஞ்சமில் - கபடமில்லாத, மனத்தினார் - மனதையுடையவர்கள்;
பணிவிலா - தாழ்வில்லாத, ஒழுக்கினார்கள் - நடத்தை யுடையவர்கள்;
பண்ணவர் - அருகபரமனை, பழிச்சுவார் - துதிப்பவர்கள்; சீலம்
-
அவர்களது சீலாச்சாரம், இன்ன - இத் தன்மையாக, காமுறுந்தகைய -
விரும்புங் குண முடையதாகும், எ-று. (23)
24. இடையறா தறிவொளி யிரவியங் கெழுதலால்
கடையிலா வறிவிறைவ னாலயங்க ளல்லது
படரொளி விமானத்தோடு பாயிருள தின்மைபோல்
விடையுலாவி யாதியாய வேற்றிலிங்க மில்லையே.
(இ-ள்.) படர் -
பரந்த, ஒளி - ஒளியையுடைய, விமானத்தோடு
- சூரிய விமானத்தோடு, பாய் - பரந்த, இருளது -
இருளானது,
இன்மைபோல் - இல்லாமற் போவதுபோல், இடையறாது - நீங்காமல்,
அறிவு - அனந்த ஞானமாகிற, ஒளி - சோதியையுடைய, இரவி
-
ஜினேஸ்வரனென்னுஞ் சூரியன், அங்கு -அந்நாட்டில், எழுதலால் -
எப்போதும் உதித்திருப்பதால், கடையிலா - முடிவிலாத, அறிவு
-
கேவல ஞானமுடைய, இறைவன் - நாதனது, ஆலயங்களல்லது -
கோவில்களே யல்லாமல், விடையுலாவியாதியாய
- விருஷப
வாஹனமேறிச் செல்லும் ஈஸ்வரன் முதலாகிய, வேற்றிலிங்கம்
-
பேதஸ்வரூபம், இல்லை-, எ-று. (24)
25. குறையிலாக் குடிகளாற் குழீஇயவூர் கொடைவளர்த்
திறையிடு மிவற்றினா லியல்பினாய நாடெழின்
னிறைமதி நடுவணெய்த னின்றமீன் குழாங்கள்போ
லிறைவன திருக்கைசூழ்ந்த நாலொண்ணா யிரங்களே.
(இ-ள்.) குறையிலா
- (தனம் குணம் முதலியவைகளால்)
குறைவில்லாத, குடிகளால் - குடிஜனங்களால்,
குழீஇய -
சேர்ந்திருக்கப்பெற்ற, ஊர் - ஊர்கள் (அதாவது ஊரில் உள்ளவர்கள்),
கொடைவளர்த்து - தானங்களை மிகுதியாகச் செய்து, இறையிடும் -
அரசனுக்கும் பகுதிப்பணம் கட்டும், இவற்றினால் - இவை முதலாகிய
தொழில்களினாலே, இயல்பினாய - நல்ல ஸ்வாபவத்தோடு கூடிய, நாடு
- அத்தேசத்தில், எழில்நிறை - கலைகளாகிய அழகு நிறைந்த, மதி -
சந்திரன், நடுவணெய்த - மத்தியிலிருப்ப, நின்ற - சூழ்ந்திராநின்ற,
மீன்குழாங்கள்போல் - தாராகணங்களைப் போல், இறைவனதிருக்கை
- அரசன் இருப்பிடமாகிய பிரதான நகரத்தை,
சூழ்ந்த - சூழ்ந்திருக்கும் நகரங்கள், நாலெண்ணாயிரங்கள் - முப்பத்தீராயிரங்களாம், எ-று.
இவை சக்ரவர்த்தியின் ஆளுகைக்குட்பட்டுத்
தனித்தனி அரசர்
ஆளும் நகரங்களாகும். (25) |