பக்கம் எண் :


160மேருமந்தர புராணம்  


 

நன்றாய   -   பவித்திரமாகிய,    உண்டி  -  ஆகாரத்தை,   தான்.
தாதாவானவன் -  உவந்து,  சந்தோஷித்து,  எவர்க்கும் - யாவர்க்கும்,
ஈதல்  -  கொடுப்பது,  தானமாம்  -  ஆஹாரதானமாகும்,  தானும் -
அதுவும்,  மூன்றாம் -  உத்தமமத்திம  ஜகன்னிய பாத்திர பேதத்தால்
மூன்று  விதமாகும், மூன்றும் - அந்த  மூன்றும், ஊனுணும் கொடுமை
யார்க்கும்  உடன்பட்டு - சம்பந்தப்பட்டு மாம்ஸம் புசிக்கும் அஸம்யத
ஸம்மியக் திருஷ்டிகளுக்கும்,  ஊனுணார்களுக்கும், மாம்ஸம் புசிக்காத
விரதத்தை பலமாகவுடைய  வீரதீகன்  முதலாகியவர்களுக்கும், மான -
பெருமையாகிய  குணத்தையுடைய, மாதவர்க்கும் - மஹாதபசையுடைய
முனிவர்களுக்கும்,   ஈதல்   வரிசையால்   -   ஆகாரம் கொடுக்கும்
கிரமத்தினாலே,     பெருகும்    -    விருத்தியடையும், (அதாவது :
சம்பந்தப்பட்டு     மாம்ஸம்     புசிக்கும்     அஸம்யத    ஸம்யக்
திருஷ்டிகளுக்குக்     கொடுப்பது  ஜகன்னிய  பாத்திரதானமென்றும்,
மாம்ஸம்    புசிக்காத     விரதத்தை   பலமாகவுடைய    விரதீகன்
முதலானவர்களுக்குக்  கொடுப்பது  மத்தியம  பாத்திர தானமென்றும்,
மகாதபசையுடைய    முனிவரர்களுக்குக்     கொடுப்பது     உத்தம
பாத்திரதானமென்றும் சொல்லப்பட்டு விருத்தியாகும்), எ-று.

     இதிற்  கூறப்பட்ட  அஸம்யத  ஸம்யக்  திருஷ்டி யாரென்றால்
நாலாங்  குணஸ்தானவர்த்தி  தர்சனீகனாகும்.   அவன்  மூடத்திரயம்,
அஷ்டமதம்,  சங்காதி,  அஷ்டதோஷம்,  ஷட்  அநாயதநம் என்னும்
இருபத்தைந்து  மலங்களினீங்கிய  சம்மியக்த்துவத்தையுடையவன்; மது,
மத்திய, மாம்ஸம் புசிப்பவனல்லன்; அப்படியிருகக அவனை ஊனுணும்
கொடுமையானென்று ஆசிரியர் ஏன்சொன்னாரென்றால் அவன் ஆப்த,
ஆகம,       குருக்களை       அறிந்தவனாயும்,      தத்துவார்த்த
சிரத்தானமுள்ளவனாயும், அஸம்யத னென்கிறதினால் விரதமில்லாதவன்
ஆகையினால்   ஊனுணும்  கொடுமையானென்றார்;  எப்படியென்றால்
அவன்  விரதங்  கைக்கொள்ளாததினாலே  வெங்காயமுதலான  கந்த
மூலாதிகளைப்  புசிக்கிறான்; கந்த மூலாதிகள் அனந்தஜீவ நிகாயமாய்
நிகோத  ஜீவன்கள்   உற்பத்திக்கு  ஸ்தானமாயிருப்பதால்  அவற்றை
அவன்     தின்கிறதினாலே    ஊனுணும்      கொடுமையானென்னு
சொல்லப்பட்டான்;    அவனுக்கு   ஆகாரமளிப்பது   மேற்கூறியபடி
ஜகன்னிய  பாத்திரதானமாகும்;  இப்படி  அஸம்யதஸம்யக் திஷ்டியே
ஜகன்னிய பாத்திரமாயிருக்கின் மித்தியா திருஷ்டி, மிஸ்ரன் முதலாகிய
பேர்களுக்குத்  தானங்  கொடுக்கக் கூடாதே யெனின் அவர்களுக்கும்
கொடுக்கலாம்.  ஆனால் அது பாத்திரமாகாது. அப்படியிருந்தும் அது
கொடுக்கலாமென     எவ்வாறு    ஏற்பட்டதெனின்   ஜீவதயவினால்
ஸதாவரஜங்கமாதி    சமஸ்த    ஜீவன்களையும்   ரக்ஷிக்கவேண்டும்;
எல்லாவற்றிற்கும்   உபகாரம்   பண்ணவேண்டும் என்று ஜினேஸ்வரர்
கூறியருளியபடியினாலே     அவ்வாறு     ஏற்பட்டது.    ஆதலின்
அவர்களுக்கு    ஆகார   மளிக்கலாம்;  அந்தப்பாத்   திரயோக்கிய
மல்லாத    தானத்தின்    பலனை     ஆசிரியர்   அடுத்தபாடலில்
தெரிவிக்கிறார்.   ஸம்யக்த்துவத்தின்   விவரங்களை  பதார்த்தஸாரம்
ஸம்மியக்த்துவாதிகாரத்தில் கண்டு  கொள்க.  உடன்பட்டும் என்பதில்
உம்மை - அசை.                                       (126)