பக்கம் எண் :


162மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  உறவியை - ஜீவன்களை, பெரிதும் - மிகவும், ஓம்பி -
பாதுகாத்து,  ஒழுக்கத்தை  -  ஸாமாயிகாதி  சாரித்திரத்த,  நிறுத்தி -
தன்னிடத்திலிருத்தி, உள்ளம் - மனமானது, பொறிவழி - பஞ்சேந்திரிய
வழிகளில்,  படர்ச்சி  -  செல்வத்தை,  நீக்கி - செல்ல  வொட்டாமல்
பரிகரித்து, பிறர்க்கு - அன்னியர்களுக்கு,  நன்றாற்றி - நன்மையையே
செய்து, பொய்தீர்  -  குற்றந்தீர்ந்த,  நெறியினை  - சன்மார்க்கமாகிற
இரத்தினத்திரயத்தை,  தாங்கி   -   தரித்து,  நீங்கா   -  ஒருகாலும்
நீங்குதலில்லாத, வீட்டின்பம்  -  மோக்ஷ  சௌக்கியத்தை, விழைதல்
செய்யும் - இச்சிக்கும், உறு - பெரிதாகிய,  தவர்க்கு - தவசையுடைய
மகா   முனிவரர்களுக்கு,  ஈந்த  வெல்லாம்  - கொடுக்கப்பட்டவைக
ளெல்லாம், உத்தம தானமாம் - உத்தம தானமாகும், எ-று.      (129)

 353. ஊனொடு தேனுங் கள்ளு முவந்தவை பிறவு மீதற்
     றானமென் றுரைத்துத் தம்மைக் கொன்றுயிர்க் கூனை யீவாா
     தானமுந் தயாவு மெல்லாந் தாங்கண்ட வாறு காண்க
     வீனமென் றாலுங் கேளா ரியல்புவே றுலகத் தாரே.

     (இ-ள்.) ஊனொடு - மாம்ஸத்தோடு, தேனும் - மதுவும், கள்ளும்
- கள்ளு  முதலாகிய அந்த ஜீவநிகாய வஸ்துக்களையும், உவந்தவை -
அவையல்லாமலும் ஏற்றுக்கொள்பவர் சந்தோஷிப்பவைகளான, பிறவும்
- இன்னம்   அனேக   வஸ்துக்களையும்,   ஈதல்   -   கொடுப்பது,
தானமென்று -  தானமாகு  மென்று,  உரைத்து - சொல்லி,  தம்மை -
தங்களையும்,  கொன்று  -  கொலை  செய்து,  உயிர்க்கு - அன்னிய
ஜீவர்களுக்கு,  ஊனை  -  மாம்ஸத்தை,  ஈவார் - கொடுப்பவர்களாற்
செய்யப்பட்ட, தானமும்  -  தானமும், தயாவும் - தயவும், எல்லாம் -
ஆகிய  இவைகளையெல்லாம், தாங்கண்டவாறு  காண்க  -  தாங்கள்
கண்டபடியே  காண்க,  இயல்பு - இயற்கையானது, வேறு - வேறாகிய,
(அதாவது  ஸ்வபாவ  குணத்தை  [தத்துவ ஞானத்தை] யறிதலைவிட்டு
விபாவகுணத்தை    யடைந்து   அஞ்ஞானிகளாகிய),   உலகத்தார் -
இவ்வுலகத்திலுள்ளவர்கள்,      ஈனமென்றாலும்     -      இவ்வித
அயோக்கியமாகிய  தானம்  குறைவான காரியமென்று  சொன்னாலும்,
கேளார் - கேட்கமாட்டார்கள், எ-று.

 354. அனகமா யனந்த மாய குணம்புணர்ந்த தார்வ மாதி
     தனையிலா தியல்பி னின்றான் றன்மையைத் தன்கண் வைத்து
     நினைதலுக் கேது நல்ல சிறப்பது வினையை நீக்குங்
     கனலிசேர் கனகந் தன்கண் காளத்தைக் கழற்று மாறே.

      (இ-ள்.)   அனகமாய்    -   பாபரஹிதமாகி,  அனந்தமாய -
முடிவில்லாத, குணம்  -  ஞானாதி குணங்களை, புணர்ந்து - சேர்ந்து,
ஆர்வமாதி  -  ராகத் வேஷாதிகளின் கூட்டம்,  இலாது - இல்லாமல்,
இயல்பின் - ஸ்வபாவத்தில், நின்றான் -