பக்கம் எண் :


168மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

திரிகின்ற காலத்தில், கைப்பட்ட - தன் கையிலுண்டாகிய, பொருளை
யெல்லாம் - திரவியங்களை யெல்லாம், கருணையால் - தயவினால்,
ஈயும் - கொடுக்கும், அந்த - அந்த, மெய்ப்பட்ட - உண்மையாகிற,
புகழினான் - கீர்த்தியையுடைய பத்திரமித்திரன், அவ்வனத்திடை -
அக்காட்டில், விரகில் - உற்சாகமாக, புக்கான் - அடைந்தான், எ-று.
(7)

 364. காரணந் தானொன் றின்றிக் கருமத்தின் பெருமை யாலே
     வாரணிந் திலங்குங் கொங்கை மங்கைய ரோடவ் வள்ளல்
     தாரணி சோலைக் குன்றந் தன்னுளே திரியும் போழ்தின்
     வேரநின்றிலங்குஞ்  சிந்தை வேங்கைநின்றதனைக் கண்டான்.

   (இ-ள்.)  (அவ்வாறடைந்து) காரணந்தான் - காரணமானது, ஒன்று
-  யாதொன்றும்,  இன்றி -  இல்லாமல்,  கருமத்தின் - கருமத்தினது,
பெருமையாலே  -  மிகுதிப்பாட்டினாலே,  வார்  -   இரவிக்கையை,
அணிந்து   -   தரித்து,   இலங்கும்   -  விளங்கும்,  கொங்கை  -
ஸ்தனங்களையுடைய, மங்கையரோடு - ஸ்திரீகளோடு, அவ்வள்ளல் -
அவ்வீகைத்தன்மையுடைய        பத்திரமித்திரன்,     தார்      -
பூங்கொத்துக்களையுடைய,    அணி  -  அழகுபெற்ற,   சோலை  -
தோப்புகளையுடைய,    குன்றம்     தன்னுளே    -  பர்வதத்திலே,
திரியும்போழ்தில் -திரிகின்ற காலத்தில்,வேரநின்று - வைரபாவத்தோடு
கூடிநின்று,   இலங்கும்  -  விளங்கும்,  சிந்தை  - மனத்தையுடைய,
வேங்கைநின்றதனை   -   அவ்விடத்தில்  நின்றதாகிய  அப்புலியை,
கண்டான் - பார்த்தான், எ-று. (8)

 365. கண்டவன் பெயரு மெல்லைக் கடியதோர் பசியி னாலும்
     எண்டிசை யவரு நிற்ப வெழுந்தவே ரத்து மோடி
     விண்டெரி விளக்கின் மேலே விட்டில்பாய்ந்திட்ட தேபோல்
     தண்டிவர் தோளி னான்மேற் றாப்ப்புலி பாய்ந்த தன்றே.

    (இ-ள்.)  கண்டவன் - (மேற்கூறியபடி புலியைப்) பார்த்த அவன்
பெயருமெல்லை -  அதைவிட்டு நீங்கிச்செல்லுந் தருணத்தில், கடியது
-   தீவிர    முள்ளதாகிய,  ஓர் -  ஒப்பற்ற,  பசியினாலும்  -  பசி
வேதனையாலும்,   எழுந்த    -   (அவனைக்கண்ட  மாத்திரத்தில்)
உண்டாகிய,  வேரத்தும்  -  வைரபாவத்தினாலும்,  ஓடி  - விரைந்து
சென்று,   விண்டு   -   மிகுதியாக   ஒளிவிட்டு,  எரி  - எரிகின்ற,
விளக்கின்மேல்   -   தீபத்தின்மேல்,   விட்டில்   -  விட்டிலானது,
பாய்ந்திட்டதே   போல்  -  பாய்ந்து  அதனை  அவிப்பதைப்போல,
எண்டிசையவரும்  -  அஷ்டதிக்கிலுள்ளவர்களும்,  நிற்ப  - இருக்க,
தண்டு  -  ஸ்தம்பம்,  இவர் - (அவற்றின் திரட்சியையும் அழகையும்
பெறும்பொருட்டு)          விரும்புகின்ற,      தோளினான்மேல் -
தோள்களையுடைய  பத்திரமித்திரன்மேல்,   தாய்ப்புலி  -  முன்னே
சுமித்திரையென்னும்  தாயாயிருந்த  புலியானது, பாய்ந்தது - பாய்ந்து
அவனைக்கொன்றது, எ-று. (9)