பக்கம் எண் :


 பூரணசந்திரன் அரசியற் சருக்கம் 209


Meru Mandirapuranam
 

   புண்ணின்மேல் பட்டவேல் போல வச்சொலை
   யெண்ணிடா திகழ்ந்தவ னெழுந்து போயினான்.

   (இ-ள்.) மண்ணின்மேல் - இப்பூமியின்மேல், மற்று - பின்னையும்,
இந்தச் செல்வம் -   இப்படிப்பட்ட  ராஜஐஸ்வரியமானது, மேல்வர -
மேலாக   வரும்  படி,    எண்ணி  -   நினைத்து,  புண்ணியம்  -
சுபபரிணாமமாகிய புண்ணியத்தை, ஈண்ட - பொருந்த, நீ செய்கென -
நீ  இப்போது செய்வாயாக வென்று யான் சொல்ல, (அச்சொல்லானது
அவனுக்கு)  புண்ணின் மேல் - இரணத்தின் மேல், பட்டவேல் போல
- பாய்ந்த  வேலாயுதத்தைப் போல  (வருத்தஞ்  செய்ய  அதனால்),
அச்சொல்லை -  என்னால் சொல்லப்பட்ட  அந்தத் தர்ம வசனத்தை,
எண்ணிடாது -  உயர்ந்ததாக நினைக்காமல்,  இகழ்ந்து  -  இகழ்ச்சி
செய்து, அவன் -  அவ்வரசகுமாரன், எழுந்து போயினான் - என்னை
விட்டு நீங்கி எழுந்து போய்விட்டான், எ-று. (94)

 451. புலங்கண்மேல் புரிந்தெழு பொறிக ளோம்பியே
     விலங்குபோ லேயவன் வீய்ந்து போகுமோ
     இலங்குசெம் பொன்னெயி லிறைவ னல்லறத்
     தலங்கல்வே லானவ னடையு மோசொலாய்.

    (இ-ள்.)   (ஆதலின்)    புலங்கள்  மேல்  -  ஐம்புல  விஷய
வஸ்துக்களின் மேல், புரிந்து - விரும்பி, எழு - எழுகின்ற, பொறிகள்
- பஞ்சேந்திரியங்களையும்,   ஓம்பி   -   உபசரித்து,   அவன்  -
அக்குமாரன்,   விலங்குபோல்  -  மிருகத்தைப்  போல (அதாவது :
திரியக் ஜீவனைப்போல),  வீய்ந்து  போகுமோ - அழிந்துபோவனோ,
(அல்லது)     இலங்கும்    -    விளங்கும்,     செம்பொன்    -
சிவந்தபொன்னாலாகிய,  எயில் -  மும்மதில் சூழ்ந்த சமவசரணத்தில்
வீற்றிருக்கின்ற,  இறைவன்  -   அருகத்பரமேஸ்வரனால்   அருளிச்
செய்யப்பட்ட, நல் - நல்ல, அறத்து - ஸ்ரீ ஜிநதருமத்தில்,  அலங்கல்
- மாலையையணிந்த,  வேலான் -  வேலாயுதத்தை  யுடையவனாகிய,
அவன் -  அவ்வரச  குமாரனான  பூரணசந்திரன்,   அடையுமோ -
சேர்வானோ, சொல்லாய் - சுவாமி நீ எனக்குச் சொல்வாயாக (என்று
கூறினான்), எ-று. (95)

வேறு.

 452. மாதவி யுரைத்த வெல்லாம் மாதவன் மனத்தை நோக்கும்
     போதியி னுணர்ந் தறத்தைப் புரவலன் புரிந்து கொள்ளும்
     யாதுநீ கவல வேண்டா மதனுக்கே யேது வாக
     வோதுமிக் கதையைக் கேட்டு நீயவற் குரைக்க வென்றான்.

    (இ-ள்.)     (அவ்வாறு)     மாதவி  - பெரிய தவத்தையுடைய
இராமதத்தாரியாங்கனை,   உரைத்தவெல்லாம் -  சொல்லியவைகளை
யெல்லாம், மாதவன் - பெரிய