(இ-ள்)
சூட்சியால் - உபாயத்தினால், பகை - சத்துருக்களை, சுருக்கலல்லது -
குறையச் செய்வதே யல்லாமல், வாள்
-
வாளாயுதத்தினால், செய் - செய்கின்ற, போர் - யுத்தம்,
இலன் -
இல்லாதவன், வன்சொல் இன்றி - கடுஞ்சொல் இல்லாமல்
(இன்
சொல்லால் செய்யும்), மண் ஆட்சியால் - பூலோக ஆளுகையினாலே,
இசைகேட்ட - இனிமையான கீதத்தைக் கேட்ட,
அசுணமா -
அசுணப்பறவையின், தாட்சிபோல் - வணக்கத்தைப்போல, வையம் -
உலகிலுள்ளோர், இறைஞ்சும் - தாமாகவே அவனை வணங்குவார்கள்,
எ-று.
தான் - அசை.
(44)
45. நல்ல தொல்குலத் தரச னாதலாற்
சொல்லுஞ் செய்கையுஞ் சோர்வெய் தாமையாற்
புல்லி னார்புகழ் மாது பூமகள்
சொல்லின் செல்வியுஞ் சுளிவு நீங்கியே.
(இ-ள்) (இன்னும்
அவன்) நல்ல - நன்மையாகிய, தொல் -
பழமை பொருந்திய, குலத்து - உயர்குலத்தில் பிறந்த, அரசனாதலால் -
இராஜாவாகையினாலும், சொல்லும் - வசனமும்,
செய்கையும் -
காரியமும், சோர் வெய்தாமையால் - சோர்வடையாதபடியாலும்,
புகழ்மாது - கீர்த்திதேவியும், பூமகள் - இலக்குமி தேவியும், சொல்லின்
செல்வியும் - சரஸ்வதிதேவியும், சுளிவு - கோபம் (விரோதம்), நீங்கி -
இல்லாமல், புல்லினார் - அவனைச் சேர்ந்தார்கள், எ-று.
எனவே அவன் பெரும்புண்ணியமுடையவனென்பது
பெறப்படும்.
இப்புண்ணியோதயத்தாலாகிய, புகழ் பூமி ஞானங்கள்
உலக
வழக்கிற்கிணங்கப் பெண்பாலாகச் சொல்லப்பட்டன.
[சாஸ்திரப்
பிரமாணத்தில் லௌகீகம், பரமார்த்தம் என
இருவகையுண்டு;
அவற்றுள் பரமார்த்தம் என்பது - நிச்சயம் (யதாஸ்வ ரூபம்) ஆகும்.
லௌகீகம் - பலவிதமாகும். ஆகையால் உலக
வழக்கிற்கேற்ப
இச்சொய்யுளில் புண்ணியம் பலவிதமாகச் சொல்லப்பட்டது.] (45)
வேறு.
46. கற்பகந் தனையணை காமர் வல்லிபோல்
வெற்றிவேல் வேந்தனை வேள்வி நீர்மையாற்
பொற்பமைந் தெழுதிய கொடிய னார்புணர்ந்
தற்புநீர்க் கடலிடை யழுந்து நாளிலே.
(இ-ள்) கற்பகந்தனை
- கற்பகமரத்தை, அணை -
சேர்ந்திருக்கின்ற, காமர் வல்லிபோல் - காமர்வல்லிக் கொடிபோல,
வெற்றி - ஜெயம்பொருந்திய, வேல் - வேலாயுதத்தையுடைய,
வேந்தனை - வைசயந்தனென்னுமிவ்வரசனை, பொற் |