வஞ்சிநுண் ணிடைமல ராட்கி டந்துடை
யஞ்சொலார் மனக்களி றணைபொற் றம்பமே.
(இ-ள்) குஞ்சிகள் - (அப்புத்திரனது)
தலையின் மயிர்கள், நிழல்
- பிரகாசம் பொருந்திய, மணி -
இந்திரநீல ரத்தினத்தினது,
கதிர்க்குழாம் - கிரணசமுகங்களாகும்; முகம் - முகமானது, மஞ்சிலா -
களங்கமில்லாத, மதி - சந்திரனையொக்கும்; புயம் - தோள்கள், மணி
- அழகிய, எழுக்கள் - ஸ்தம்பங்களையொக்கும்; மார் - மார்பானது,
வஞ்சி - கொடிப்போன்ற, நுண் -
மெல்லிதாகிய, இடை -
இடையையுடைய, மலராட்கு - இலக்குமிக்கு, இடம் -
இடமாகும்;
துடை - துடைகளானவை, அம் -
அழகிய, சொல்லார் -
சொல்லையுடைய மாதர்களது, மனம் - மனமாகிய, களிறு - யானையை,
அணை - கட்டும்படியான, பொற்றம்பம் - அழகிய ஸ்தம்பங்களாகும்,
எ-று. (51)
வேறு
52. மணியி னைக்கடைந் தாக்கிய வானவிற்
கணைபெய் தூணிக ளாங்கணைக் காலடி
பிணிய வீழ்ந்தசெந் தாமரைப் பீடினா
லணியி னுக்கணி யும்மவ னாயினான்.
(இ-ள்) கணைக்கால்
- கணைக்கால்கள், மணியினை -
இரத்தினங்களை, கடைந்து - கடைசல் பிடித்து,
ஆக்கிய -
(அவற்றால்) செய்யப்பட்டிருக்கிற, வானவில் - இந்திரன் தனுவினது,
கணை - அம்புகளை, பெய் - வைக்கப்பட்ட,
தூணிகளாம் -
அம்பறாத்தூணிகளை யொக்கும்; அடி - பாதங்கள், பிணியவிழ்ந்த -
கட்டவிழ்ந்து மலர்ந்திராநின்ற, செம் -
சிவந்த, தாமரை -
தாமரைப்பூவை யொக்கும், பீடினால் - பெருமையினால், அணியினுக்கு
- அழகுகளுக்கெல்லாம், அவன் - அக்குமாரனானவன், அணியும்
ஆயினான் - மேலான அழகானான், எ-று. (52)
53. இந்து வின்னுத யத்திலங் குந்திசை
வந்த தாரகை போல மடந்தைபால்
மைந்தன் வந்து பிறந்து சயந்தனென்
றிந்த வையக மேத்த வளர்ந்தநாள்.
(இ-ள்) (இவன்செய்தி இப்படியிருக்க)
இந்துவின் - சந்திரனுடைய
உதயத்து - உதயத்தினாலே, இலங்கும் -
விளங்கும், திசை -
கீழ்த்திசையில் வந்த - பிறகு உதயமாகிவந்த,
தாரகைபோல -
நட்சத்திரம்போல, மடந்தைபால் - அம்மாதினிடமாக,
வந்து -
கருப்பத்தில் வந்து, மைந்தன் - மற்றொருபுத்திரன், பிறந்து - தோன்றி,
சயந்தனென்று - சயந்தனென்னும் நாமமுடையனாகி, இந்த |