பக்கம் எண் :


 நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் 255


 

மந்திரமாகிய கவசத்தோடும்), பன்னரும் - சொல்லுதற்கரிய, மூவரும் -
(ஆச்சாரிய,  உபாத்தியாய, சாதுக்கள்  என்னும்) மூவரும், அத்திரம் -
(இருகையிலும்)      இரண்டு       ஆயுதங்களாக,      பாங்கின் -
வரிசைக்கிரமத்தால், ஆயபின் - ஸ்தாபிதங்களான பிறகு, தன்னுடம்பு -
தன்னுடைய    சரீரத்தையும்,    உயிரினை   - தனது ஆத்மனையும்,
தடறுவாளென    -   உறையும்     அதற்குள்ளே    யிருக்கப்பட்ட
வாளாயுதமும்போல்   பின்னத்   திரவியங்களென்று, உன்னி நின்று -
(இவ்விதமாகச்    சரீரம்வேறு,    ஆத்மன்வேறென்று அதனதனுடைய
ஸ்வரூபம்)   பாவித்து  நின்று, ஐம்பதம் - பஞ்சபரமேஷ்டி பதங்களை
(அல்லது பஞ்சமந்திரங்களை), உன்னி - மேலாக எண்ணி, ஓதினான் -
உச்சரித்தான், (அதாவது : ஜெபம் செய்தான்), எ . று.           (97)

551. கண்ணினாற் களங்கமின் னிலையைக் கண்டிடா
    பண்ணுறப் பெரியவர் பாதஞ் சேர்ந்தவப்
    புண்ணியச் சுருதியைச் செவியிற் பூரியா
    விண்ணுல கடைந்தனன் வென்றி வீரனே.

     (இ-ள்.)   (அவ்வாறாயபின்)    வென்றி   - ஆத்மவெற்றியை
யடையும்படியான, வீரன்   - வீரபுருஷனாகிய சிம்மச்சந்திர முனிவன்,
கண்ணினால்- காட்சியினால் (அதாவது : தர்சனபலத்தால்), களங்கமில்
- மாசில்லாத,    நிலையை   - யாதார்த்த தத்துவத்தின் நிலையினை,
கண்டிடா - கண்டு, பண்ணுறு - குணமடையும்படியான, அப்பெரியவர்
பாதம் -   அந்த    ஆப்தர்களாகிய   (பரமாத்ம, அந்தராத்மர்களது)
பாதத்தை, சேர்ந்து - ரக்ஷணையாகவடைந்து, அப்புண்ணியச் சுருதியை
- (அவர்களாலருளிச்   செய்யப்பட்ட அப்பியுதய நைபேஸ்ரீரீயஸத்திற்குக்
காரணமாகிய   பஞ்சாஸ்திகாய, ஷட்திரவிய, சப்ததத்துவ, நவபதார்த்த
ஸ்வரூபமாகிய)  ப்ரவசனஸார ஸ்ரீதத்தை, செவியில் - காதில், பூரியா -
நிரப்பி,  (அதாவது :   ஸ்ரீதஜ் ஞானபலத்தையடைந்து), விண்ணுலகு -
தேவலோகத்தை, அடைந்தான் - அடைந்தான், எ-று.

     சேர்ந்தவப் - என்பதில் அகரம் சாரியை.                (98)

552. பொருவிலா வுலகெனும் புரவ லர்க்கு நற்
    கிரிவமாங் கேவச்சத் தொன்ப தாவதை
    மருவினான் மாலொளி விமான மற்றதிற்
    பிரிதியங் கரத்தினைப் பெரிய வீரனே.

     (இ-ள்.)   (அவ்வாறடைந்து)  புரவலர்க்கு  - அரசர்க்கு, நல் -
நன்மையுடைய,      கிரிவமாம்    -  கழுத்தாகிய,    பொருவிலா -
உவமையில்லாத,     உலகெனும்   -   லோகமென்று சொல்லப்பட்ட,
கேவச்சத்து   - க்ரைவேயகத்தில்,   ஒன்பதாவதை - ஒன்பதாவதாகிய
உபரிமோபரிமக் கிரைவேயகத்தில்,மால் - பெரியதாகிய, ஒளி - ஜோதி