பக்கம் எண் :


 மன்னனுந்தேவியும் மைந்தனுஞ் சுவர்க்கம்புக்க சருக்கம் 299


 

     (இ-ள்.) வாரியோட்டில் - நீர் ஓடையில், வலாகு - கொக்கானது,
அரித்திட்டதேபோல்  -   தனக்குபயோக  மில்லாவஸ்துவை  நீக்கித்
தனக்கு வேண்டும் வஸ்துவைக் கிரகிப்பதுபோல், (புத்தனாகற்பாலோன்,
போதிசத்துவன்     சம்சாரத்துணின்று)     பாரமீதைகள்   பத்தும் -
பத்துவிதமான   பாரமீதைகள்  என்னும் குணநிறைவுகளை, பயின்று -
அப்பியசித்துப் பெற்று, அவத்து - அவஸ்து அல்லது நிர்வாணமடைய
வேண்டுமென்ற, ஆர்வத்தோடு - விருப்பதுடன், மறித்து - திரும்பவும்
(தன் இஷ்டப்படியே, பாரமீதைகளையடைந்ததால் புத்தனாகப் பிறந்து)
அறிவு - போதி  அல்லது  ஞானத்தை,  எய்திடின் - பெறுவானாகில்,
நேரில் - (அந்தப் புருஷன்) நேராகவே,  நித்தமும் - நித்தியத்தையும்,
ஒட்டினனாகுமே - பொருந்தினவனாகும், எ-று.

     ஒரே   புருஷன்   போதி  சத்துவனாய்ப் பாரமிதைகள் என்று
சொல்லப்படும்  பத்துக் குணங்களைப் பூர்த்திசெய்து,  மறுஜன்மத்தில்
புத்தனாகப்பிறந்து    போதியடைந்து   நிர்வாணம்   பெறுவானாகில்
க்ஷணிகவாதத்தின்படி     அனித்தியனாயிராமல்     நித்தியனாகவும்
ஆகிறான்.

     பாரமிதை பத்தாவன : தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம்,
பிரஜ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம், இவைகள் பெருகி நிறைதல்
பாரமிதையாம்.

           "கபிலையம்பதியி
            னளம்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துப்
            போதி மூலம் பொருந்திவந் தருளித்
            தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து"

என்று மணிமேகலை வஞ்சிமாநகர்புக்க காதையிலும், (41 - 48).

           "ஆதி முதல்வன் போதி மூலத்து
            நாத னாவோ னளிநீர்ப் பரப்பி
            னெவ்வமுற் றான்றன தெவ்வந் தீரெனப்
            பௌவத் தெடுத்துப் பாரமிதை முற்றவு
            மறவர சாளவு மறவாழி யுருட்டவும்
            பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே"

என்று  -  மணிமேகலை  -  தவத்திறம்பூண்டு  தருமங்கேட்ட காதை
(23 - 28) - யிலும் கூறியுள்ளதைக் காண்க.

     சுமேதா   (போதிசத்துவனும்)  தீபங்கர புத்தனும் என்ற - ஜாதக
கதையில்   சுமேதா -  ‘நான்  புத்தனாக  வேண்டில்  என்ன செய்ய
வேண்டும்"    என்று   யோஜித்து   தானம்,   முதலாகிய    பத்துப்
பாரமிதைகளை ஒவ்வொன்றாகப் பூர்ணமாகப்