பக்கம் எண் :


328மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  சீவன்  -  ஜீவனானது,   அத்தியால்  -  ஸத்ஸ்வரூப
அஸ்தித்துவத்தினாலும்,   அறிவினால்    -   சேதனமாகிய  ஞானதி
குணங்கனினாலும்,  அறிவன்  -   ஞானாதி   குணியாகிய,  அத்தி -
ஸத்ஸ்வரூப   அஸ்தியாகும்,   என்னின் - என்றால்,  அத்திமாறாய -
அந்த       அஸ்திக்குமாறாகிய,      எல்லாக்     குணத்தையும் -
அசேதனாதியாகிய   வஸத்ஸ்வரூபத்தை  யெல்லாம், அடைய - சேர,
பற்றில்   -   யோசிக்குமிடத்தில், நத்தியாம்பங்கம் - நாஸ்தியென்கிற
பகுதியும், தோன்றி - ஏற்பட்டு, சீவனை - ஆத்மனை, நாத்தியென்னும்
- ஸ்யாநாஸ்தி    யென்றாக்குகின்றது,   இத்திறம் - இந்த விதாயமாக,
பங்கமேழும் - ஸப்தபங்கிகளும்,  பொருளிடை - திரவியத்தினிடத்தில்,
இருந்தவாறு - இருக்கப்பட்ட விதமாம், எ-று.                 (148)

 709. உண்மையு மின்மை தானு மொருபொருட் டன்மை யாகும்
     வண்மையைச் சொல்லும் மூன்றாம் பங்கமற் றவ்வி ரண்டிற்
     கண்ணுறு பொருளை யோர்சொற் சொலாமையைத் துரியங் காட்டுந்
     திண்ணியோ டவாச்சி யத்தின் செறிவினைச் செப்பு மூன்றும்

     (இ-ள்.)   உண்மையும்   -   ஸ்யாதஸ்தியும், இன்மைதானும் -
ஸ்யாந்நாஸ்தியும், (ஆகிய இவ்விரண்டும்), ஒரு பொருள் தன்மையாகும்
- (ஒரு  திரவியத்தினுடைய ஸத்குண அசத்குணங்களாகிய ஸ்வதிரவிய,
ஸ்வக்ஷேத்ர, ஸ்வகால, ஸ்வபாவ, பரத்திரவிய, பரத்திரவிய, பரக்ஷேத்ர,
பரகால   பரபாவங்களால்)  ஏகத்திரவியத்தினிடத்தேயாகும், மூன்றாம்
பங்கம்  - (ஸ்யாதஸ்தி   நாஸ்தியென்கிற)   மூன்றாவது   பிரிவானது,
வண்மையைச் சொல்லும் - இந்த இரண்டு வளப்பத்தையும் ஏகமாகவே
கூறிக்   காண்பிக்கும், அவ்விரண்டில்  -  இப்படி அஸ்தி நாஸ்திகள்
இரண்டால்,   கண்ணுறு - கருதப்பட்டிருக்கின்ற, பொருளை - ஜீவாதி
திரவியத்தை,   ஓர்   சொல்   -    ஒரு   சொல்லால்  ஏகாந்தமாக,
சொலாமையை   -    சொல்ல   முடியாத   தன்மையை,  துரியம் -
நாலாவதாகிய அவக்தவ்வியம், காட்டும் - காண்பிக்கும், திண்ணியோடு
- அஸ்தி,    நாஸ்தி,   அஸ்திநாஸ்தி    யென்கிற   இம்மூன்றோடு,
அவாச்சியத்தின்   செறிவினை  -    அவக்தவ்வியத்தின் சேர்க்கைய,
மூன்றும்  -  மற்ற   மூன்று    பகுதியும்,    செப்பும்   -  (அஸ்தி
அவக்தவ்வியமென்றும்,      நாஸ்தியவக்தவ்வியமென்றும்,     ஸ்யா
தஸ்திநாஸ்தியவக்தவ்வியமென்றும்) சொல்லும், எ-று.

     இவ்வாறு   கூறியதனால்,   இந்த விதமாக ஒரு பொருளிடத்தே
ஸப்தபங்கி    நயம்   தெரிந்து   திரவியம்     நிச்சயம்     செய்ய
வேண்டியதென்பது பெறப்படும்.                            (149)

 710. செப்பிய பங்க மேழும் வத்துக்க டோறுஞ் செல்லு
     மிப்படி யுரைத்த வெல்லா மேவகா ரத்தோ டொன்றிற்
     றப்பித்தீ நயங்க ளாகித் தடுமாற்றந் தன்னை யாக்கும்
     மெய்ப்பட வுணர்ந்த போழ்தின் வீட்டினை விளைக்கும் வேந்தே.