பக்கம் எண் :


334மேருமந்தர புராணம்  


 

அந்த  ஸமயத்தில், எழுந்து - ஆத்மனிடத்தில் தோன்றி, அவற்றால் -
அவைகளினால்,  வெளியின்மேல்  - ஆத்மவெளியின் மேல்பாகத்தில்,
நின்ற   -   குளிர்ந்திரா      நின்ற,   துண்டம்   -  மித்தியாத்துவ
துணிக்கையானது, கண்டம் மூன்றாகி - மூன்று துண்டுகளாகி, வீழும் -
வீழா நிற்கும், எ-று.                                      (159)

 720. திரியிற்பெய் தரைத்த போழ்திற் றிரிவித மாகி வீழும்
     வரகைப்போல் மிச்சஞ் சம்மா மிச்சஞ்சம் மத்த மாகி
     விரகினால் வீழ்ந்த மூன்றோ டனந்தானு பந்தி நான்காந்
     திரையினை யவித்தான் மாற்றாந் திண்கடற் கரையைக் காணும்.

     (இ-ள்.)   திரியில்   -   இயந்திரத்தில்,  பெய்து   -   இட்டு,
அரைத்தபோழ்தில்   -   அரைத்த  காலத்தில், திரிவிதமாகி - (வரகு,
கப்பி,   அரிசி,    என்று)    மூன்று   விதமாக, வீழும் - வீழ்கின்ற,
வரகைப்போல்     -    வரகு    என்கிற    தான்யம்போல், (இந்த
மித்தியாத்துவமும்),  மிச்சம் - மித்தியாத்துவமென்றும், சம்மாமிச்சம் -
சம்மியக்           மித்தியாத்துவமென்றும்,         சம்மத்தமாகி -
ஸம்மியக்துவமுமென்றாகி,    விரகினால்  -  கிரமத்தினால், வீழ்ந்த -
வீழப்பட்ட,   மூன்றோடு - மூன்றினோடு,  நான்காம் - நாலுவிதமான,
அனந்தானுபந்தி    திரையினை  -  அனந்தானுபந்தி, (குரோத, மான,
மாயா,   லோபமென்னும்   ஸம்ஸார    ஸமுத்திரத்தின்) அலைகளை,
அவித்தான்     -     உபசமிக்கப்      பண்ணியவன்  (அதாவது :
உபசஸம்மியக்துவ    பரிணாம     விசோதியுற்றவன்),    மாற்றாம் -
ஸம்ஸாரமாகிற,    திண்கடல்    -  வலிமையாகிய ஸமுத்திரத்தினது,
(அதாவது :   அனாதியாகிய   ஸம்ஸார   சுழற்சியினது), கரையை -
முடிவை, காணும் - காண்பான், எ-று.                      (160)

 721. மிச்சத்தப் பகடி யேழும் விரகினா லுவச மிப்ப
     வுச்சத்தி னின்ற வீர னுபசம சம்மத் திட்டி
     மிச்சத்தப் பகடி பந்த முதல்வியா பார நீங்கா
     வச்சத்தை வினைகட் காக்கி யந்தமூழ்த் தளவு நிற்கும்.

    (இ-ள்.) மிச்சத்தப்பகடி யேழும் - மித்தியாத்துவ பிரகிருதியாகிய,
(மித்தியாத்துவம், ஸம்மியக் மித்தியாத்துவம், ஸம்மியக்துவப் பிரகிருதி,
அனந்தானுபந்தி,   குரோத,  மான,  மாயா,  லோபமென்னும், இந்த)
ஸப்தவித மித்தியாத்துவ  பிரகிருதிகளும், விரகினால் - கிரமத்தினால்,
உவசமிப்ப - உபசமத்தையடைய,  உச்சத்தின் -  (ஸம்மியக்துவமாகிற
ரத்ன  பர்வதத்தினுடைய)  சிகரத்தால்,  நின்ற -  இராநின்ற, வீரன் -
பராக்கிரம   புருஷன்,    உபசமசம்மத்திட்டி   -   உபசம் சம்மியக்
திருஷ்டியாகும், (அந்த உபசம சம்மயக்திருஷ்டியின் நிலைமையானது),
மிச்சத்தப்பகடி - மித்தியாத்துவ பிரகிருதிகளுக்கு, பந்தமுதல் - பந்தம்
முதலாகிய, வியாபாரம் - வியாபாரத்தை, நீங்கா - நீங்கி, வினைகட்கு
- கருமங்களுக்கு, அச்சத்தை -