பக்கம் எண் :


342மேருமந்தர புராணம்  


 

வேக  முனிவன், முண்டமீரைந்தோடு - 1தசமுண்டங்களோடு, ஒன்றி -
பொருந்தி,   முனிமையில்  -  முனீஸ்வரத்தன்மையில்,  தனியனாகி -
ஒப்பற்றவனாகி,   தண்   -   குளிர்ச்சி     பொருந்திய,     துளி -
மழைத்துளிகளையுடைய,   முகிலில் - மேகத்தைப்போல,  செல்லும் -
ஆகாயத்திற்     செல்லும்படியான,     சாரணத்தன்மை   - ஆகாச
சாரணத்தன்மையை,    பெற்றான்   - இவ்வித தனது தபோபலத்தால்
பெற்றான், எ-று.                                        (174)

 735. திரிவித யோகு தாங்கித் திரிவதோர் சிகரி போல
     மருவிய கொள்கை நீங்கா மாதவர் மருளச் செல்வான்
     கரியர சதனைப் போலக் காஞ்சனக் குகையைச் சேர்ந்தாங்
     கரியிள வேறு போல வருந்தவ னிருந்த நாளால்.

     (இ-ள்.)    (அவ்வாறு      பெற்றபின்),      திரிவிதயோகு -
திரிகாலயோகங்களை,  தாங்கி - தரித்து, திரிவது - திரியப்பட்டதாகிய,
ஓர் - ஒரு,     சிகரிபோல     -     பர்வதத்தைப்போல, மருவிய -
சேர்ந்திராநின்ற,    கொள்கை  - சாரித்திரங்களில், நீங்கா - நீங்காத,
மாதவர்    -     மஹாதபத்தையுடைய முனிவர்களெல்லாம், மருள -
பிரமிக்கும்படி,     செல்வான்    -   செல்லுகின்றவனாய், (பின்னர்),
கரியரசதனைப்போல      -      ஓர்      அரசயானையைப்போல,
காஞ்சனக்குகையை - காஞ்சனம் என்னும் பர்வதக்குகையில்,  சேர்ந்து
- அடைந்து,    ஆங்கு    -  அவ்விடத்தில், அரியிளவேறுபோல -
இளமைபொருந்திய    ஆண்     சிம்மத்தைப்போல, அருந்தவன் -
அரியதபத்தையுடைய    கிரணவேகன்,   இருந்த நாள் - வசிக்கின்ற
காலத்தில், எ-று.

     ஆல் - அசை.                                    (175)

 736. எரிமூழ்கி யனைய கொள்கை யசோதரை யிலங்கு வாண்மேற்
     றிரிகின்ற தனைய கொள்கை சிரிதரை யோடுஞ் செம்பொன்
     விரிகின்ற குகையின் பாடம் மெய்த்தவன் றன்னை வாழ்த்தி
     யிரிகின்ற வினைய ராகி யிறைவன்பா லிருந்த காலை.

     (இ-ள்.)   எரிமூழ்கியனைய  - அக்கினியிலே முழுகினதற்குச்
சமானமாகிய,   கொள்கை    - சாரித்திரத்தையுடைய, யசோதரை -
யசோதரை யென்னும் ஆரியாங்கனையும், இலங்கு - பிரகாசிக்கின்ற,
வாள்மேல் திரிகின்றதனைய - வாளாயுதத்தின்

_________________________________________

     1.தசமுண்டமென்றது  பஞ்சேந்திரியங்களைத்  தடுத்தல் - ஐந்து,
திரிகரணங்களைக்   குப்தம்   பண்ணுதல் - மூன்று, சிரோமுண்டம் -
ஒன்று,   ஹஸ்தபாதங்களை   ஒரு  காரியத்திலும் விடாமல் நிற்பது -
ஒன்று, ஆகிய   பத்துமாம்,    ஹஸ்தபாதங்களை ஒரு காரியத்திலும்
விடாததைப்பற்றிய   விவரம், "பத்மநந்திபச்சிஸ்" என்னும் கிரந்தத்தில்
முதலாவது   யதியா   சாராதிகாரத்தில்   இரண்டாவது சுலோகத்தில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   விண்டவங்காரங்கள்   என்பதில், அம் -
சாரியை.                                               (176)