ணீதியா னோற்று வந்தீர் நீவிரிப்
பிறவி நீங்கிக்
காதிக்க ணரிந்து வீடுங் காலத்தா லடைதி ரென்றான்.
(இ-ள்.) தையலார்கள் -
ஸ்திரீமார்கள், வையத்து - இப்பூமியில்,
ஐயராய் வந்து தோன்றி - புருஷர்களாகப் புண்ணியத்தினால் வந்து
பிறந்து, மாதவந்தாங்கி - மஹா தபஸை மேற்கொண்டு
செய்து,
ஏதமொன்றின்றி - ராகத்வே ஷாதிகளில் யாதொரு குற்றமுமில்லாமல்,
(வீதராகர்களாகி, ஸகலகர்மக்ஷயம் செய்து) வீடும் - மோட்சத்தையும்,
எய்துவர் - அடைவார்கள், நீவிர் - நீங்களிருவரும்,
நீதியால் -
வரிசைக்கிரமத்தால், நோற்று - விரத சீலாதி நோன்புகளை நோற்று,
வந்தீர் - வந்தீர்கள், (ஆதலின் நீங்களும்),
காலத்தால் -
காலாந்தரத்தினால், காதிக்கணரிந்து -
(புருடர்களாய்ப் பிறந்து
தவஞ்செய்து) காதிகர்ம க்ஷயஞ்செய்து, இப்பிறவிநீங்கி - இச்சம்ஸார
பிறப்புக்களை விட்டு நீங்கி (ஸகல கர்மக்ஷயம் செய்து),
வீடும் -
மோக்ஷத்தையும், அடைதிர் - அடைவீர்கள்,
என்றான் - என்று
சொன்னான், எ-று. 180
741. தூம்பன்ன தடக்கை மாவைத் துயர்செய்து நரகம் புக்கங்
காம்பல கடல்க ளெல்லா மவலமுற் றரிதிற் போந்து
மேம்பட லிலாத வெல்லா விலங்கினுஞ் சுழன்று மீண்டும்
பாம்பதாய்ப் பதலை வங்கிற் பாவிதான் பரிண மித்தான்.
(இ-ள்.) (இது
நிற்க அக்காலத்தில்), தூம்பன்ன
-
உள்துளையையுடைய தூம்புக்குச் சமானமான, தடக்கை - பெரிய
துதிக்கையையுடைய, மாவை - அசனி கோடமாகிற
யானையை,
துயர்செய்து - குக்குட ஸர்ப்பமாயிருந்து கடித்து
அவ்வியானை
இறந்துபடும்படி துன்பப்படுத்தி, (பிறகு தானும் இறந்து),
நரகம் -
மூன்றா நரகத்தை, புக்கு - அடைந்து, அங்கு - அந்நரகத்தில், ஆம்
- உண்டாகிய (தன்னாயுஷ்யகாலமாகிய), பல கடல்களெல்லாம்
-
பலவாகிய ஏழு கடற்கால முழுமையும்,
அவலமுற்று - (நரக
வேதனையால்) வருத்தமுற்று, அரிதில் -
மஹா அருமையாக
(ஆயுரவஸாநத்து), போந்து -
வந்து, மேம்படலிலாத -
மேன்மையாதலில்லாத, எல்லா விலங்கினும்
- திரஸ
ஸ்தாவரங்களெல்லாவற்றிலும், சுழன்று - பரிப்ரமித்து,
மீண்டு -
மறுபடியும், பாம்பதாய் - மலைப்பாம்பாக, பதலை வங்கில் - பர்வதக்
குகையில், பாவிதான் - பாபிஷ்டியாகிய சத்தியகோஷனானவன்,
பரிணமித்தான் - பிறந்தான், எ-று. (181)
742. இருவரு மியம்பக் கேட்ட வறத்தின ராகிப் போகப்
பெரியவன் குகையைச் சேரப் பிறையெயி றிலங்க வங்காந்
தெரியெழ விழித்துக் காணா விறைவனைப் பிடித்த போழ்தி
லருகவென் றுரைப்ப மீளா வச்சிய ரதனைக் கண்டார்.
|