யத்தை, அடைந்தோய் - பெற்றவனும், நீ - நீயே, எவ்வுயிர்க்கும் -
ஸ்தாவரசங்கமாதி சகல ஜீவன்களுக்கும், இதம்
- நன்மையாகிய
அபயதானத்தை, அளிப்போய் - கொடுப்பவனும், நீ - நீயே, இன்னா
- துன்பத்தையுடைய, பிறவி - ஸம்ஸாரப் பிறப்பை,
எறிவோய்நீ -
கெடுப்பவனும் நீயே, கதமும் - குரோதத்தையும்,
மதமும் -
கர்வத்தையும், காமனையும் - மன்மதனையும், கடந்து
- ஜெயித்து,
காலன் - அந்திய காலனையும், கடந்தோய்
- தாண்டினவனாகிய,
நின் - உன்னுடைய, பதபங்கயங்கள் - பாதபத்மங்களை, பணிவாரே -
இப்போது வணங்குகின்றவர்களே,
உலகம் - பிறகு
இவ்வுலகிலுள்ளோர், பணிய - தங்களை வணங்கும்படியாக, வருவார்
- உனது நிலையில் வருவார்கள், எ-று.
1க்ஷூதாதியஷ்டாதச
தோஷவிவரத்தைப் பதின்மூன்றாவது
சருக்கத்தில் மேருமந்தரர்கள் தபத்தில் கண்டு கொள்க. (60)
809. சிந்திப் பரிய குணத்தோய்நீ தேவ ரேத்துந் திறலோய்நீ
பந்தம் பரியும் நெறியோய்நின் பாத கமலம் பணிவாருக் கந்த
மில்லா வின்பத்தை யளித்து முத்தி யகத்திருத்து
மெந்தை
பாதம் பணிவாரிவ் வுலகம் பணிய வருவாரே.
(இ-ள்.) சிந்திப்பரிய
- நினைத்தற்கரிய, குணத்தோய் -
குணத்தையுடையவன், நீ - நீயே, தேவர் - சதுர்நிகாயாமார்கள்,
ஏத்தும் - ஸ்துதிக்கின்ற, திறலோய் - அனந்த வீரியத்தையுடையவன்,
நீ - நீயே, பந்தம் - கருமபந்தங்களை,
பரியும் - விடுதலை
செய்கின்ற, நெறியோய் - ரத்தினத்திரயமார்க்கத்தை
யுடையவனே,
நின் - உன்னுடைய, பாதகமலம் - பாதத்தாமரைகளை,
பணிவாருக்கு
- வணங்குகின்றவர்களுக்கு, அந்தமிலா - முடிவில்லாத, இன்பத்தை -
ஸௌக்கியத்தை, அளித்து - கொடுத்து, முத்தியகத்து - மோட்சத்தில்,
இருத்தும் - சேர்க்கும்படியான, எந்தை - எமது ஸ்வாமியே, பாதம் -
நின்பாதங்களை, பணிவார் - வணங்குபவர்கள்,
(பின்புதங்களை),
இவ்வுலகம் - இவ்வுலகத்திலுள்ளோர், பணிய -
வணங்கும்படியாக,
வருவார் - வந்து இந்நிலைமையை யடைவார்கள், எ-று," என்பனவாம். (61)
வேறு.
810. மலர்மழை பொழிந்து மாரி முகிலென வந்து வானோ
ரலைகடன் முகிலோ டொன்றி முழங்குவ தனைய
தென்ன
வுலகுடை யிறைவன் பாத முள்ளமெய் மொழியோ டொன்றி
நிலையிலாப் பிறவி நீங்கு நெறியினாற்
றுதிகள் சொன்னார்.
(இ-ள்.) வானோர் - சதுர்நிகாயாமரர்கள்,
வந்து - இச்சக்ராயுத
பகவானிடம் வந்து, மாரிமுகிலென
- மழையைப்பெய்யும்
மேகத்தைப்போல, மலர்மழை -
|