பக்கம் எண் :


 சக்கராயுதன் முத்திச் சருக்கம் 381


Meru Mandirapuranam
 

பிறகு   ஸிம்மச்சந்திரனென்னும்    அரசனாகி,     மாதவத்தால் -
உத்கிருஷ்டமாகிய   தபஞ்செய்து   அதன்பலத்தால்,  இணையிலா -
உபமையில்லாத,     கேவச்சத்துள்   -   நவக்கிரைவேயகமென்னும்
அஹமிந்திரலோகத்தில்,   அமரனாய்   -     (ப்ரீதிங்கரனென்னும்)
அஹமிந்திர தேவனாகி, (ஆயுரவஸானத்து,) இங்குவந்து - இப்பூமியில்
மனிதனாய்வந்து,     தணிவிலா   -   குறைவில்லாத,   தவத்தில் -
தபோத்தியானத்தால்,  மாற்றை - இந்தஸம்ஸாரப் பிறவியை, எறிந்து -
கெடுத்து,    சக்கராயுதன்   -    சக்ராயுதபகவான்,    போய்   -
(பரிநிர்வாணமாகி ஸ்வயம்புத்தன்மை பெற்றுச்) சென்று, இணையிலா -
முன்னொருகாலும்  சேர்தலில்லாத,  உலகம்  -  மோட்சபதவியாகிய
ஸித்தி         க்ஷேத்திரத்தில்,         புக்கான்   -     புகுந்து
நிஸ்ஸம்ஸாரபரமாத்மஸ்வரூபமடைந்தான்,    அறத்தியற்கை  -   ஸ்ரீ
ஜினதர்மத்தினது   ஸ்வரூபமானது,  இது ஆம் - இத்தன்மைத்தாகும்,
எ-று. (64)

ஏழவாவது :

சக்கராயுதன் முத்திச்சருக்கம் முற்றுப்பெற்றது.