வீர மாதவர் சூழ மெய்த்தவன்
தார கைமதி தானு மொத்தனன்.
(இ-ள்.) (அவ்வாறு வந்து சேர்ந்து தங்கியபோது), மெய்த்தவன்
- உண்மையாகிய தவத்தையுடைய வஜ்ரதந்த முனிவன், வீரமாதவர் -
ஸம்மியக் துவ குணவீரியத்தையுடைய முனிவர்கள், சூழ -
தன்னைச்சூழ, மால் - பெரிதாகிய, மேரு - மஹாமேரு பர்வதமானது,
(தாழ்வரையைச் சார்ந்த), பத்திராலவனத்துள் - பத்திராஸால வனத்தில்,
வாரணம்மலை - திக்கஜ பர்வதங்கள், சூழ - சூழும் படியாக,
நின்றதும் - உயர்ந்து நடுவில் நின்றதையும், தாரகை - நக்ஷத்திர
ஸமூகங்களின் மத்தியில், (விளங்கும்), மதிதானும் - சந்திரனையும்,
ஒத்தனன் - ஒப்பாகிக் குணங்களினால் மேலாகப் பிரகாசித்தான்,
எ-று. (8)
821. பிறவி மாக்கடல் பெயர்க்கு மாற்றலா
லிறைவ னன்னவ னேந்து கொள்கையான்
மறுவின் மாதவன் வைய மூன்றினு
முறவி நின்றவா றோத வொன்றினான்
(இ-ள்.) (அவ்வாறு விளக்கியபோது), பிறவி - ஸம்ஸாராமாகிற,
மாக்கடல் - பெரிதாகிய ஸமுத்திரத்தை, பெயர்க்கும் - நீக்கும்,
ஆற்றலால் - ஸம்மியந்துவ சக்தியினால், இறைவன் அன்னவன் -
ஸர்வஜ்ஞனை நிகர்த்தவனும்,ஏந்து - தரித்திராநின்ற, கொள்கையான் -
ஸம்மியக் சாரித்திரத்தையுடையவனும், (ஆகிய), மறுவில் -
குற்றமில்லாத, மாதவன் - மஹாதபத்தையுடைய இந்த வஜ்ரதந்த
முனிவன், வையமூன்றினும் - இந்த மூன்று லோகத்திலும், உறவி
ஜீவன்கள், நின்றவாறு - இராநின்ற விதமாகிய திரிலோக பிரஜ்ஞப்தி
என்னும் ஆகமத்தை, ஓத - சங்கங்களுக்குச் சொல்வதற்கு,
ஒன்றினான் - பொருந்திக் கீழ்வருமாறு சொல்கின்றவனானான்,
எ-று. (9)
822. ஒன்றி ரண்டொரு மூன்று நாலைந்தாய்
நின்றவைம்பொறி நெறியின் வாழுயி
ரொன்று நீர்மர நில நெருப்பு காற்
றென்றிக் காயமைந் தெய்தி வாழுமே.
(இ-ள்.) (அதாவது :-) ஒன்று - ஏகேந்திரியமும், இரண்டு -
த்வீந்திரியமும், ஒரு மூன்று - ஒப்பற்ற த்ரீந்திரியமும், நாலு -
சதுரிந்திரியமும், ஐந்து - பஞ்சேந்திரியமும், ஆய் - ஆகி, நின்ற -
இங்கு நின்ற, ஐம்பொறி நெறியின் - இந்தப் பஞ்சவிதமாகிய இந்திரிய
மார்க்கணைகளில், வாழும் - வாழ்கின்ற, உயிர் - ஜீவன்களில், ஒன்று
- ஸ்பரிசனேந்திரிய மாத்திரமுடைய ஏகேந்திரிய ஜீவன்கள், நீர் -
அப்காயமும், மரம் - வனஸ்பதிகாயமும், நிலம் - பிருத்வீகாயமும், |