பக்கம் எண் :


442மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) முதலாம்   புரையின்    -   முதல்  நரகத்து  முதல்
புரையிலிராநின்ற    நாரகர்களுக்கு,   உயர்வு - சரீரோத்ஸேதமானது,
முழமூன்று    -    மூன்று முழம், ஆம் - ஆகும், கீழ் - அம்முதல்
நரகத்துப்   பதிமூன்றாவது    புரையில் நாரகர்களுக்கு, முழமூன்று -
மூன்று   முழமும்,    வில்லேழ்    -      ஏழுவில்லும், விரலாறு -
ஆறங்குலமுமாகிய    ஏழேமுக்காலே     வீசம்     வில்லு, உள -
உன்னதமாகவுளதாம்,   இது   -   இந்த  ஏழேமுக்காலே வீசம் வில்,
எழுவாய் - (ஏழு நரகத்துக்கும்), ஏழுதரம், ஐஞ்ஞூறு வில்லெய்தளவும்
- ஐந்நூறு   வில்    அடைகிற   பரியந்தம்,  வழுவாது - தப்பாமல்,
இறுதொறும்  - கீழ் கீழ்ப்புரைகள்தோறும், இரட்டியதாம் - இரட்டித்த
இரட்டித்த உன்னதங்களாகும், எ-று.

     ஈறுதொறும் என்பது - இறுதொறுமென்றாயிற்று.           (10)

940. புகையைந் துமுதற் புரைபுக் கவர்தா
    முகையார் விழுவா ருளவா யுவெலாம்
    புகையே ழொடைஞ்ஞூ றுவில்கா வதமூன்
    றுகையார் விழுவார் முதலீற் றினுளார்.

     (இ-ள்.)    முதற்புரை  புக்கவர்தாம்   -  முதல்  நரக  முதற்
புரையிலடைந்திராநின்ற   நாரகர்கள்,      புகையைந்து    -  ஐந்து
யோஜனையுன்னதம்,    உளவாயு    வெலாம் - தங்களுக்குண்டாகிய
ஆயுஷ்யநாளெல்லாம்,    உகையார்      விழுவார் -     எழும்பித்
தலைகீழாபவராய்    இடைவிடாமல்   விழுவார்கள், புகையேழொடு -
ஏழுயோ ஜனையோடு, ஐந்நூறுவில் - ஐந்நூறு வில்லு காவத மூன்று -
மூன்றுகாதமுமாகிய   இந்த  ஏழேமுக்காலே வீசம் யோஜனை உயரம்,
முதலீற்றினுளார் - அம்முதல் நரகத்துப் பதின்மூன்றாவது புரையிலுள்ள
நாரகர்கள்,  உகையார் விழுவார் - எழும்பித் தலை கீழாபவராய் நரக
பூமியில் விழுவார்கள், எ-று.                                (11)

941. எழுவா யதிரட் டியிரட் டியதாய்
    வழுவா திறுவாய் புரைதோ றும்வரா
    வெழுதா நரகத் தியல்பா யவைஞ் ஞூ
    றொழியா துவிழுந் தெழுமோ சனையே.

     (இ-ள்.)   எழுவாய் - ஏழுதரம், அது - அந்த ஏழேமுக்காலே
வீசம்   யோஜனை, இரட்டியிரட்டியதாய் - இரட்டித்த இரட்டித்ததாகி,
வழுவாது   -   தப்பாமல்,   இறுவாய்புரைதோறும் - கீழ்கீழ்புரைகள்
தோறும்,    வரா   - வந்து, எழுதாநரகத்து - ஏழாநரகத்தில், (உள்ள
நாரகன்), இயல்பாய - ஸ்வபாவமாகிய, ஐஞ்ஞூறு யோசனை - ஐந்நூறு
யோசனை   உன்னதம்,   ஒழியாது - இடைவிடாமல் விழுந்தெழும் -
எழும்பித் தலைக்கீழாக விழுவான், எ-று.

     ‘எழுதாம்" என்பதில், தாம் - அசை.                     (12)