ளென்கிற, குலமலை - குலபர்வதங்களுக்கு, விளக்கை ஒத்தான் -
தீபத்தைப் போல பிரகாசியாநின்றான், எ-று. (2)
972. வினையத்தின் முனிவ னொத்து விஞ்சையின் வளர்ந்த வீர
னினைவொத்துத் தீய வேந்தர் நிலைகெடுத் தரசு மேவிக்
கணமொத்தெவ் வுயிர்க்கு மீந்து கமலப்பூந் தடத்து வெய்யோன்
றனையொத்து மரைமு கத்தார் தம்முலைத் தொய்யிற் பட்டான்.
(இ-ள்.) (அங்ஙனம்), வினையத்தின் - வணக்கத்தினால்,
முனிவனொத்து - முனிவரனைப்போல, விஞ்சையின் -
அரசர்களுக்குரிய வித்தைகளோடு, வளர்ந்த - வளர்ச்சியடைந்த, வீரன்
- வீரனாகிய அக்குமாரன், நினை வொத்து - தனது எண்ணம்
நன்மார்க்கத்திற் பொருந்தி, தீயவேந்தர் - சத்துரு ராஜாக்களுடைய,
நிலை - நிலைமையை, கெடுத்து - போக்கி, அரசு - ராஜ்யத்தை,
மேவி - பொருந்தி, கணமொத்து - மேகமானது கைம்மாறின்றி
மழையை வருஷிப்பதுபோல, எவ்வுயிர்க்கும் - ஸகலர்களுக்கும், ஈந்து
- தியாகம் கொடுத்து, கமலப் பூந்தடத்து - அழகிய தாமரைத்
தடாகத்துக்கு, (நேராகவிளங்கும்), வெய்யோன்றனை யொத்து -
சூர்யனை நிகர்த்து, (அதாவது : சூரியன் தாமரைத் தடாகத்துக்கு
நன்மை செய்து விளங்குவதுபோல), மரைமுகத்தார் தம் - தாமரை
மலர்போன்ற முகமுடைய தேவிமார்களின், தொய்யில் - சாந்தால்
எழுதிய இடுகொடிகளையுடைய, முலை - ஸ்தனங்களினாலே
யுண்டாகின்ற காமபோகத்தில், பட்டான் - அடைந்தான், எ-று. (3)
973. அழலிடை வந்த மைந்த னவ்வழ றணியு மெல்லை
நிழலிடை யிருப்ப தேபோ னிரையத்துத் துயரந் தீரக்
குழலன மொழியி னார்தங் குவிமுலைத் தடத்து வைகிப்
பழவினை துணிக்க நின்ற பான்மைவந் துதித்த நாளால்.
(இ-ள்.) அழலிடை - ஆதபத்தினின்றும், வந்த - நீங்கி வந்த,
மைந்தன் - புருஷனானவன், அவ்வழல் - அவ்வாதபம்,
தணியுமெல்லை - நீங்கும் பரியந்தம், நிழலிடை - நிழலிலே,
இருப்பதேபோல் - இருப்பது போல, (இந்த ஸ்ரீ தாமரவாகிய அரசன்),
நிரையத்துத் துயரம் - பூர்வத்தில் நரகத்தில் அனுபவித்த துக்கமானது,
தீர - நீங்கும்படி, குழலன - புள்ளாங்குழலிசைக்குச் சமானமாகி
இனிமை பொருந்திய, மொழியினார் தம் - வசனத்தையுடைய,
தேவிமார்களின், குவி - திரட்சி பொருந்திய, முலை -
ஸ்தனங்களையுடைய, தடத்து - மார்பினிடத்து, வைகி -
காமராகத்தினால் தங்கி, பழவினை - பூர்வத்திலிருந்துண்டாகிய
வினைகள், துணிக்க - கெடும்படி, நின்ற - நின்றதாகிய, பான்மை -
குணமானது, வந்து - அடைந்து, உதித்த நாள் - உதயத்தைக்
கொடுத்த காலத்தில், எ-று.
ஆல் - ஈற்றசை. (4) |