பக்கம் எண் :


 பிறவிமுடிச்சருக்கம் 465


 

பாவத்தில்,    ஒன்றுமின்றி    -    சிறிதுமில்லாமல்,   வேந்தனும் -
ஸிம்மஸேனனென்னும் அரசனும், வீட்டில்  - என்றும் நிங்குதலில்லாத,
இன்பபாரத்தை     -    அனந்த   ஸௌக்கியமாகிய        சுத்த
ஸ்வாத்மோத்தலாபத்தை,   முடிய - முழுதிலும், (அதாவது : அனந்த
ஞானாதி    ஸகல குணங்களையும்), சென்றான் - (திரவிய, க்ஷேத்திர,
கால பாவ நியதத்தால்) அடைந்தான், என்றான் - என்று சொன்னான்,
எ-று.                                                  (16)

986. மந்திரி நாகம் மான மாப்பின்வா ரணத்தி னாகம்
    வெந்தெரி நரகன் மிக்க மாசுணம் நரகன் வேடன்
    அந்தமா நரகன் னாக மாரழ னரகன் மற்றும்
    மைந்தன்சங் கிக்கு வித்துத் தந்தன்றன் வரவி தாமே.

     (இ-ள்.)  (பின்னரும்), மந்திரி - ஸ்ரீபூதி மந்திரியானவன், பின் -
பின்பு,   நரகம்   - அகந்தன ஸர்ப்பமாகி, (அதன் பின்பு), மானமா -
சமரீமிருகமாகி,  (அதன் பிறகு),வாரணத்தினாகம் - கோழிப் பாம்பாகி,
(பின்னை),  வெந்தெரி - மிகவும் வெந்தெரிகின்ற, நரகன் - மூன்றாவது
நரகனாகி,   (பிறகு),    மிக்கமாசுணம்   -  உருவத்தில்     மிகுந்த
மலைப்பாம்பாகி, (பின்பு),நரகன் - நாலாவது நரகனாய், (அதன் மேல்),
வேடன் -(அங்கு நின்று நீங்கி) வேடனாகி, (பின்பு) அந்தமாநாரகன் -
கடைசியாகிய    ஏழாநரகனாய்,    (ஆயுரவஸானத்து),     நாகம் -
பாம்பாகியிறந்து    (பின்பு),   ஆர்  அழல்   - நிறைந்த   அக்கினி
சொரூபமாகிய,    நரகன் - மூன்றா நரகனாகி, மற்றும் - பின்னையும்,
சங்கிக்கு   மைந்தன் - சங்கியென்னும் தாபஸஸ்த்ரீக்குப் புதல்வனாகி,
(பிறகு), வித்துத் தந்தன் - வித்தியுத்தம்ஷ்ட்ரன்  என்பவனானான், தன்
- இவனுடைய, வரவு - பிறப்பின் வருகையானது,  இதாம் - இப்போது
சொல்லப்பட்ட வரிசையாகும், எ-று.                         (17)

987. மன்னவன் மத்த யானை சாசாரன் விஞ்சை வேந்தன்
    பின்னைகா விட்ட தேவன் பெரியவச் சிராயு தன்பின்
    பன்னருந் தவத்திற் பஞ்சா ணுத்தரத் தமரன் பார்மேல்
    மன்னிய புகழி னான்சஞ் சயந்தன்றன் வரவி தாமே.

     (இ-ள்.)  மன்னவன்- ஸிம்மஸேன மஹாராஜன், மத்த யானை -
(அடுத்த   பிறப்பில்),  மதயானையாகி,   (பின்னர் ,  விரதானுஷ்டான
பாவனையால்),  சாசாரன்  - ஸஹஸ்ரார கல்பத்து தேவனாகி, (பின்பு),
விஞ்சை   வேந்தன் - (கிரண வேகனென்னும்) வித்தியாதர வரசனாகி,
பின்னை  - மறுபவத்தில்,   காவிட்டதேவன்   - காபிஷ்ட  கல்பத்து
தேவனாகி,    (அதன்   பின்), பெரிய   - உயர்ந்த,  வச்சிராயுதன் -
வஜ்ராயுதனென்னும்   அரசனாகி, பின் - அப்பவத்தின் பிற்காலத்தில்,
பன்னரும்   -   சொல்லுதற்கரிய, தவத்தில்   -  ஜினதீக்ஷ   பிராப்த
தபஸினால், பஞ்சாணுத்தரத் தமரன் - பஞ்சாணுத்தரத்தில் அஹமிந்திர
தேவனாகி, (அதன்பின்), பார்மேல் -