(இ-ள்.)
செங்கமலமொன்று - ஒரு செந்தாமரைப் பூவின் மேல்,
இரண்டு பங்கயம் - இரண்டு செந்தாமரைப் புஷ்பங்கள், மலர்ந்தென -
புஷ்பித்தது போல, அம் - அழகிய,
கமலத்து - தேவர்களால்
நிருமித்த செந்தாமரைப் புஷ்பத்தின் மேலே,
அறிவன் -
அதீந்திரியஞான ஸ்வரூபியாகிய விமல தீர்த்தங்கர ஜீநேந்திரன், திரு -
அழகிய, அடியிணை - இருபாதங்களையும்
வைத்தளவில் -
வைத்தகாலத்தில், திங்களன - சந்திரன்போல
பிரகாசியா நின்ற,
குடைமும்மையும் - வெண்சத்திரத்திரயமும்,
மண்டலமும் -
பிரபாமண்டலமும், பொங்கிய - பெரிதாகிய, வெண் - வெளுப்பாகிய,
சாய்மரைகள் - யக்ஷகுமாரரால் வீசுகின்ற சாய்மரைகளும், செறிந்த -
சேர்ந்தன, பூமழைகள் - புஷ்ப வருஷங்களை,
பொழிந்தார் -
தேவர்கள் சொரிந்தார்கள், எ-று. (24)
1035. மாதவர்கண் மலரடி பணிந்துபி னெழுந்தார்
சோதமனோ டெண்மையுல காந்தர்தொழு தேத்தி
நாதனெதிர் வைத்தமுக ராகிமுன் னடந்தார்
காதிகெட வந்ததிரு வோடுசசி சென்றாள்.
(இ-ள்.) மாதவர்கள்
- மஹாதபஸைச் செய்கின்ற முனிவரர்கள்,
மலரடி - பகவானுடைய, செந்தாமரைப் புஷ்பம் போன்ற பாதங்களை,
பணிந்து - வணங்கி, பின் - பின்னாலே,
எழுந்தார் - எழுந்து
சென்றார்கள், சோதமனோடு - ஸௌதர் மேந்திரனோடு, எண்மை -
எட்டுப் பிரகாரமாகிய, உலகாந்தியர் - லௌகாந்திக தேவர்களும்,
தொழுது - வணங்கி, ஏத்தி - ஸ்தோத்திரஞ்
செய்து, நாதன் -
ஜினேந்திரனுடைய, எதிர் வைத்த - எதிரிலே வைக்கப்பட்ட, முகராகி
- முகத்தையுடையவர்களாகி, முன் -
முன்னாலே, நடந்தார் -
சென்றார்கள், காதிகெட - காத கர்மமானது நீங்க, வந்த - வரப்பட்ட,
திருவோடு - புண்ணியமாகிய லக்ஷ்மியோடு, சசி - மஹாதேவியும்,
சென்றாள் - அடைந்தாள், எ-று. (25)
1036. பூரசல சம்முதலெண் மங்கலங்க ளேந்தி
வேரிமலர் மடந்தையொடு மேவின ரெழுந்தார்
காரின்மணி கனகம்பொழி யாக்கமலஞ் சங்கன்
பேருடைய நிதிக்கரசர் பின்னைமுன் னெழுந்தார்.
(இ-ள்.) பூரகலசம் முதல
- பூர்ணகும்பம் முதலாக, எண்
மங்கலங்கள் - அஷ்டமங்கலங்களை, ஏந்தி - தரித்து,
வேரி -
வாசனை பொருந்திய, மலர் -
தாமரைப் புஷ்பத்தின் மேல்
வஸிக்கின்ற, மடந்தையொடு -
லக்ஷ்மிதேவியுடன், (சில
தேவவனிதைகள்), மேவினர் - பொருந்தினவர்களாகி, எழுந்தார்
-
வந்தார்கள், காரின் - மேகமானது மழையைச் சொரிவதுபோல, மணி -
இரத்தினங்களையும், கனகம் - ஸ்வர்ணங்களையும்,
பொழியா -
சொரிந்து, கமலம் - பத்மமும், |