(இ-ள்.)
குடையினொடு - சத்திரத்துடன், கொடி - துவஜங்களும்,
பருதி - சூர்யன் போலவும், மின்னின் - மின்னல் போலவும், மிசை -
ஆகாயத்தில், குலவ - பிரகாசிக்க, வடிவுடைய - ரூபம் பொருந்திய,
வான - பெரிதாகிய, வைசயந்தை -
வைஜயந்தை யென்னும்
பெயர்பெற்ற, கொடி - த்வஜக்கொடியானது, முன் - முன்னால், ஏக -
செல்ல, இடியினொலி - மேககர்ஜனையும், அவிய - அடங்கும்படி,
எழில் - அழகையுடைய (அதாவது : கெம்பீரமான தொனியையுடைய),
நாந்தி - மங்கலவாழ்த்துப் பாடல்களும், முன் - எதிரிலே, இயம்ப -
சப்திக்க, படரும் - ஆத்மனிடம் படருகின்ற, வினை - கருமங்களை,
எறியும் - சேதிக்கும்படியான, அருளாழியும் - தயவு பொருந்திய தர்ம
சக்கரமும், முன் - முன்னாலே, ஏக - செல்லவும், எ-று.
(29)
1040. தேசுதிசை சிறந்ததிசை யுடையமட வார்கள்
வாசமலர் மழைபொழிந்து மலரடி பணிந்தார்
காசினியி னீதிமுத லானவை கரந்த
வீசனெழில் வாசமல ரேறிய கணத்தே.
(இ-ள்.) ஈசன் -
திரிலோகாதிபத்யமுடைய ஜினேந்திரன், எழில்
- பிரகாசியாநின்ற, வாசம் - வாசனை பொருந்திய,
மலர் - தேவ
நிர்மித செந்தாமரைப் புஷ்பத்தின்மேல், ஏறிய
- ஆரோகணித்த,
கணத்து - அந்த ஸமயத்திலே, திசை - திக்குகளெல்லாம்,
தேசு -
ஒளி பொருந்தி, சிறந்த - சிறப்படைந்தன, திசையுடைய மடவார்கள் -
திக்குக்கன்னியராகிய தேவதைகள், வாசம் - வாசனை பொருந்திய,
மலர் மழை - புஷ்ப வருஷங்களை, பொழிந்து - சொரிந்து, மலரடி -
பகவானுடைய தாமரைப் புஷ்பம் போன்ற பாதங்களில், பணிந்தார் -
வணங்கினார்கள், காசினியில் - இந்தப் பூமியின், ஈதிமுதலானவை -
அதிவிருஷ்டி அனாவிருஷ்டி முதானவைகளால்
வரும்
உபத்திரவங்களெல்லாம், கரந்த - மறைந்தன (அதாவது : நீங்கின),
எ-று.
இங்ஙனங் கூறியதனால்
க்ஷேமகரமாயிற்று என்பது
பெறப்படும். (30)
1041. மூகர்மொழிந் தார்விடையின் முடவர்க ணடந்தார்
சோகமொழிந் தாரெவருஞ் செவிடர்மொழி
கேட்டார்
கோபமொழிந் தார்குபிதர் குருடர்விழி பெற்றார்
வேகமொழிந் தாறியநம் வீரனெழும் பொழுதே.
(இ-ள்.) வேகம் - விபாவகுணங்களாகிய
மோஹாதிகள், ஒழிந்து
- நீங்கி, ஆறிய - ஸ்வஸ்தபாவத்தையுற்ற,
நம் வீரன் - நமது
ஸ்வாமியாகிய அனந்த வீரியன், எழும்பொழுது - ஸ்ரீ விஹாரமாகின்ற
காலத்தில், மூகர் - ஊமைகள்,
மொழிந்தார் - பேசுந்திறம்
பெற்றார்கள், முடவர்கள் -
நொண்டிகள், விடையின் - |