மிந்திர நீலச் செப்பு மகிற்புகைப்
புகைத்த வேந்தி
மைந்தரைச் சூழ்ந்து நின்றார் மயிற்குழாம் போல
வந்தே.
(இ-ள்.) சந்தனக்குழம்பின்
- சந்தனக்குழம்பினால், ஆர்ந்த -
நிறைந்த, சந்திரகாந்தச் செப்பும் -
சந்திரகாந்தச் செப்புகளும்,
குங்குமக் குழம்புவிம்மும் - குங்குமக்குழம்பு நிறைந்திருக்கின்ற,
இரவியின் குழவிச் செப்பும் - சூரியகாந்தச் செப்பும், அகிற்புகை
-
அகிற்றூபங்களை, புகைத்த - புகைத்துக்கொண்டிருக்கின்ற, இந்திர
நீலச்செப்பும் - இந்திர நீல
ரத்தினத்தினால் செய்த
தூபகலசங்களையும், ஏந்தி - தரித்து, மயிற்குழாம்போல வந்த - மயில்
கூட்டங்களைப்போல் வந்து, மைந்தரை - இந்தக்
குமாரர்களை,
சூழ்ந்து - எப்பக்கமுஞ் சூழ்ந்துகொண்டு, நின்றார் - (பரிசாரகர்கள்)
நின்றார்கள், எ-று. (36)
1047. விசும்புற விரிந்து நாறும் விரைமர் மாலை பெய்து
பசும்பொனும் மணியும் மின்னும் படலிகை பலவு
மேந்தி
யசும்பறாக் கடாத்த வேழத் தரசிளங் குமரர்
வந்தார்
விசும்பின்மேல் வினையுற் பாத மருக்கர்தா
மிருவ ரொத்தார்.
(இ-ள்.) விசும்புற
- ஆகாயமெங்கும் பொருந்த, விரிந்து -
விசாலித்து, விரை நாறும் - வாசனை வீசுகின்ற,
மலர் மாலை -
புஷ்பமாலை முதலியவைகளை, பெய்து - வைத்து, பசும் பொன்னும் -
பசுமை பொருந்திய ஸ்வர்ணத்தினாலும்,
மணியும் -
இரத்தினங்களினாலும், மின்னும் - பிரகாசியாநின்ற, படலிகை பலவும் -
அனேகமாகிய தட்டுக்களை, ஏந்தி - தரித்து, அசும்பறா -
ஊற்று
நீங்காத, கடாத்த - மதஜலத்தையுடைய, வேழத்து -
யானையின்
மேலே, வந்தார் - வந்தவர்களாகிய,
அரசளிங்குமரர் - மேரு
மந்தரரென்கிற இரண்டு ராஜகுமாரர்களும்,
விசும்பின்மேல் -
ஆகாயத்தின் மேலே, வினையுற் பாதம் - உத்பாத காரியத்தாலான,
அருக்கர்தா மிருவரொத்தார் - இரண்டு சூர்யர்களுக்கொப்பானார்கள்,
எ-று.
பன்னிரண்டாவது :
ஸ்ரீ விஹாரச்சருக்கம் முற்றிற்று.
____
|