பக்கம் எண் :


496மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

சமானமாகிய,  கைதொழுது  -  தங்களுடைய  கைகளை  முகுளிதஞ்
செய்து,   இறைஞ்சி  -   வணங்கி,வாழ்த்தி - ஸ்தோத்திரம் பண்ணி,
கோசம்போய் - அங்கு  நின்று ஒரு குரோச தூரம் போய், ஊனந்தீர்
- குற்றம்     நீங்கி     லட்சணமமைந்த,    தூயத்தானாங்கணம் -
பரிசுத்தமாகிய  அந்த ப்ராஸாத  சைத்ய பூமியின் நடுவில், புக்கார் -
அடைந்தார்கள், எ-று. (2)

 1050. ஆங்கத னகத்து வீதி நடுவணாற் காத மோங்கிப்
      பாங்கின்மா திசையிற் பன்னீ ரோசனை காண நின்ற
      வாங்குகாந் தம்போல் மானம் வாங்குநன் மானத் தம்பம்
      பாங்கினாற் றோர ணம்வே திமங்கலம் பலவுஞ் சூழ்ந்த.

   (இ-ள்.)    ஆங்கதன் -  அவ்விடத்தே அந்த சைத்ய ப்ராஸாத
பூமியினுடைய,  அகத்து  -  மத்தியிலும்,  வீதி  -   வீதிகளினுடைய,
நடுவண் -    நடுவிலும்,    (இராநின்றனவாகி),   நாற்காதமோங்கி -
நாலுகாதம் உன்னதத்தையுடையதாகி, பாங்கின் - வரிசைக்கிரமத்தால்,
மாதிசையில் -   மஹா  திக்குகளில், பன்னீரோசனை - பன்னிரண்டு
யோஜனை தூரம்,  காண -  அளவிற்காணும்படி, நின்ற - ஒவ்வொரு
மஹா  திக்கில்   ஒவ்வொன்றாகி  நின்ற,  வாங்கும்  -  இரும்பைத்
தன்னிடம்    வாங்கிக்      கொள்ளும்படியான,   காந்தம்போல -
காந்தத்தைப்போல,     மானம்   -   பார்க்கின்றவர்களுடைய மான
கர்மத்தை, வாங்கும் - வாங்கிக்கொள்ளும்படியான, நல் - அழகாகிய,
மானத்தம்பம் - மானஸ்தம்பங்களை, பாங்கினால் -  வரிசையினாலே,
தோரணம் - தோரணங்களும், வேதி - மதில்களும், மங்கலம் பலவும்
- அஷ்டமங்கலங்களும், சூழ்ந்த - சூழ்ந்திரா நின்றன, எ-று. (3)

 1051. வயிரநற் படிகம் வயிடூ ரியமடி நடுவ ணுச்சி
      யுயரத்தின் பாக மோக்கம் படிகமேற் கீழ வோக்கம்
      வெயில்விடு தாரைக் கீழ்மே லாயிரம் நடுவி ரட்டித்
      துயரினைக் கெடுக்குஞ் சித்தப் படிமைநாற் றிசையு மாமே.

   (இ-ள்.)    அடி - அந்தமான ஸ்தம்பத்தின் அடியில், வயிரம் -
வஜ்ரரத்தினமும்,  நடுவண் - மத்தியில், நல் - நன்மையாகிய, படிகம்
-ஸ்படிகரத்தினமும்,   உச்சி    -     மேலே,     வயிடூரியம் -
வைடூரியரத்தினமுமாகி,  உயரத்தில்   -    மொத்த   உன்னதத்தில்,
பாகமோக்கம் -  பாதிநீளம் (அதாவது : நடுவில் இரண்டு காதநீளம்),
படிகம் -  
ஸ்படிகரத்தினமும்,  மேல்  கீழவோக்கம்  - மேலே  ஒரு
காதநீளம் வைடூரியமும் கீழே ஒரு காதநீளம் வஜ்ரரத்தின மயமுமாகி,
கீழ்  - கீழிலாகிய  வஜ்ரரத்தின  ஸதம்பமும்,  மேல் - மேலேயாகிய
வைடூரியரத்தின   ஸ்தம்பத்திலும்,   வெயில்   விடு  -  கிரணத்தை
வீசுகின்ற,  தாரை - பட்டைகளானவை, ஆயிரம் - ஆயிரமாகி, நடுவு
-  மத்தியில்   இரண்டு   காதநீளமான   ஸ்படிகத்தில்,   இரட்டி -
இரண்டாயிரம்