(இ-ள்.)
ஆடகத்து - ஸ்வர்ணத்தினால்,
இயன்று -
செய்யப்பட்டதாகி, வீதியின் - அந்த
வன பூமியினுடைய, திக்கு -
மஹா வீதிகளின், இருமருங்கும் - இரண்டு பக்கங்களிலும்,
இரண்டு
கோபுரத்தளவுஞ் சென்ற - உதயதர
கோபுரப் பியந்தர
பாகத்திலிருந்து ப்ரீதிதர கோபுரம்வரையில் செல்லப்பட்டதாகி,
மூன்று
நிலையினால் - மூன்று நிலைகளால், எட்டுப்பந்தி
- ஒவ்வொரு
நிலையிலும் எட்டெட்டுப்
பந்தியாய் (அதாவது :
ரங்கங்களையுடையதாகி), ஊடு சென்று -
அதனுள்ளே சென்று,
சோதிடர் தேவிமார்கள் -
ஜோதிஷ்கத் தேவர்களுடைய
தேவியர்களாகிய, நல்லார் - ஸ்த்ரீமார்கள், வீடில - கெடுதலில்லாத,
பலவும் - பலப்பிரகாரமான நர்த்தனங்களை,
ஆடும் - ஆடுகின்ற,
நாடகசாலை - நர்த்தனசாலைகள், நின்ற - இராநின்றன, எ-று.(19)
1067. பைம்பொனும் மணியி னாலும்
குயின்றவே பாத வாதிச்
செம்பொன்மங் கலங்கள் வேதி
தோரணஞ் செறிந்த யாவு
மும்பர்தம் முலகும் போக பூமியு மொன்றி னாற்போல
வம்பணி முலையி னாரு மைந்தரு மலிந்த வெங்கும்.
(இ-ள்.)
பைம் - பசுமைபொருந்திய,
மணியினாலும் -
இரத்தினங்களினாலும், குயின்ற - நிருமித்திராநின்ற,
பாதவாதி -
கற்பகவிருட்ச முதலான, யாவும் - (சைத்யவிருட்சம்,
ஸ்தூபைகள்)
இவைகளையெல்லாம், செம் - சிவந்த, பொன் - பொன்னாலாகிய,
மங்கலங்கள் - அஷ்ட மங்கலங்களும்,
வேதி - மதில்களும்,
தோரணம் - துவார தோரணங்களும், செறிந்த - சேர்ந்திராநின்றன,
எங்கும் - அவ்வனபூமியில் எவ்விடங்களிலும், உம்பர்தம் முலகும் -
தேவருலகமும், போகபூமியும் - போக பூமியும், ஒன்றினாற் போல் -
வந்து பொருந்தினது போல, வம்பணி - இரவிக்கையை யணிந்த,
முலையினாரும் - ஸ்தனங்களையுடைய தேவ ஸ்த்ரீயர்
கூட்டங்களும்
மனுஷ்ய ஸ்த்ரீ கூட்டங்களும்,
மைந்தரும் - தேவகுமாரர்
கூட்டங்களும் மனுஷ்யர் கூட்டங்களும், மலிந்த - நிறைந்திராநின்றன,
எ-று. (20)
1068. குயிலிசை முழவ மாகக் கொம்பின்மேற்றும்பி பாட
மயில்நடம் பயிலு மெங்கும் வானவர் மடந்தை நல்லார்
புயலியன் மின்னுப் போலச் சோலைவாய்ப் பொலிந்து தோன்றிக்
கயல்விழி பிறழக் காமங் கனியநின் றாடி னாரே.
(இ-ள்.) எங்கும் - இன்னும் அவ்வனபூமியி லெவ்விடங்களிலும்,
குயில் - குயில்கள் கூவுகின்ற, இசை -
ஓசையானது, முழவமாக -
மத்தளமாக, கொம்பின்மேல் - பூங்கொத்துக்களின்மே லிராநின்ற,
தும்பி - தும்பிக்கூட்டங்கள், பாட - சங்கீதம்போலப்பாட, மயில் -
மயில்களானவை, நடம்பயிலும் - நர்த்தனஞ் செய்வதுபோல்
சிறகு
விரித்தாடா நிற்கும், வானவர் மடந்தை நல்லார் - தேவ குமாரியர்கள்,
புயலியல் - மேகத்திற் றோன்றுகின்ற, மின்னுப்போல் - மின்னற்
|