பக்கம் எண் :


 சமவசரணச்சருக்கம்509


Meru Mandirapuranam
 

ஐம்பத்தாறாயிரம்    -    ஐம்பத்தாறாயிரம்,   கோமானுடையன  -
ஸ்வாமியினுடையனவாய்,  முன்றில் - அழகிய ஐந்தாம் பிரகாரமாகிய
முற்றத்தில், உலாவுகின்ற -  அசையா நின்றன, படியிது - இந்த த்வஜ
பூமியானது,  காதமூன்றாய்  -   மூன்று   காதமகல    முடையதாகி,
பயோதிபோல்   -     ஸமுத்திரம்     போல,      சூழ்ந்ததாம் -
சூழ்ந்திராநின்றதாகும், எ-று. (30)

 1078. பலமணி பயின்ற பத்தி பித்திநற் படிகம் பைம்பொன்
     னிலைகளைந் தாகி நின்ற நாடக சாலை தோறும்
     முலையும்மே கலையும் முத்த மாலையும் குலாவ மின்போற்
     பலநடம் பயிலும் மாதர் பவணர்தம் பவழ வாயார்.

   (இ-ள்.)   பல - பலவாகிய, மணி - இரத்தினங்களால்,பயின்ற -
செய்யப்பட்ட,  பத்தி -  பந்தி வரிசைகளையுடைய, பித்தி - சுவர்கள்,
நல் - நன்மையாகிய,  படிகம் -  ஸ்படிகத்தினாலும், பைம் - பசுமை
பொருந்திய, பொன் -  பொன்னாலும்,  நிலைகள் - நிலைகளானவை,
ஐந்து -   ஐந்தாகவும்,    ஆகி    நின்ற -    ஆகியிரா    நின்ற,
நாடகசாலைதோறும்  -  இந்த   துவஜ   பூமி   வீதியில்   இரண்டு
பக்கத்திலுமுள்ள  நர்த்தன  சாலைகளில், முலையும் - ஸ்தனங்களும்,
மேகலையும் -  மேகலா  பரணங்களும்,  முத்தமாலையும்  -  முத்து
மாலைகளும், மின்போல் -  மின்னலைப்போல, குலாவ - பிரகாசிக்க,
பல - பலவாகிய, நடம் - நர்த்தனங்களை,   பயிலும் - செய்யாநின்ற,
பவணர்தம் - பவண  தேவர்களுடைய,    மாதர் - ஸ்த்ரீயர்களாகிய,
பவழவாயார்    பவளக்கொடிபோல்     சிவந்த     வாயையுடைய
நர்த்தகிகளாவர், எ-று. (31)

 1079. புழைக்கைமா வீட்ட மோளி யாளானம் புணர்ந்தவற்றின்
      தழைச்செவி போல வாடும் பதாகையாந் தரணி தன்னை
      மழைக்கைமா வேந்தர் வந்து மங்கல மரபி னெய்திக்
      குழைத்தெழும் பொழிலைச் சூழ்கல் யாணகோ புரத்தைச்
                                                 சார்ந்தார்.

   (இ-ள்.)  புழைக்கை - துவாரம் பொருந்திய துதிக்கையையுடைய,
மாவீட்டம் -   யானை   சமூகங்களானவை,   ஒளி  - ஒழுங்காகிய,
ஆளானம் - கட்டுத்தறிகளை, புணர்ந்து -  வரிசை வரிசையாகச் சேர,
(அவ்விடத்தில் ஆடுகின்ற), அவற்றின் -  அவ்வியானைகளின், தழை
- விசாலித்த, செவிபோல -  காதுகள்போல, ஆடும்  - அசைகின்ற,
பதாகையாம் -  துவஜக் கொடிகளையுடைய, தரணிதன்னை - துவஜ
பூமியை,  மழை -    மேகத்தைப்போன்ற   (அதாவது : மேகமானது
மழையைச்  சொரிவதுபோல  தியாகம்  கொடுக்கும்படியான),  கை -
கைகளையுடைய,   மா  -   பெருமை    பொருந்திய,   வேந்தர் -
மேருமந்தரரென்கிற   வரசகுமாரர்கள்,   மங்கலம்   -  மங்கலமாக
(அதாவது :              தங்களுக்கு          பாபவிநாசமாகவும்
புண்ணியலாபமாகும்படியாகவும்),  மரபின் -   கிரமத்தினால், எய்தி -
அடைந்து, (அதனப்பியந்தரத்திலிரா நின்ற),  குழைத்து  -  தளிர்த்து,
எழும் - உயர்ந்திராநின்ற, பொழிலை - கற்பக