பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 63


 

எங்களுக்கு, அவை - அந்த ஞானங்கள், அனேகம் -  (மதியாதியாக
உள்பேதம்)  அநேகமாம்,  பிறவி -  ஸம்ஸாரப்பிறப்பு, நீ - உனக்கு,
இலை  -   கிடையாது,  யாங்களோ  -  நாங்களோ,  பிறவியில்  -
அப்பிறப்புக்களினால்,  பெரியோம் - மிகுந்தவர் களா யிராநின்றோம்,
செறிவது - இனிச் சேரும்படியான, ஓர் - ஒப்பற்ற, கதி - கதியானது,
உனக்கு  -  உனக்கு,  இலை -  கிடையாது, எமக்கு - எங்களுக்கு,
நான்கு    -    நாலுகதிகள்    இரா    நின்றன,     இவற்றால் -
இவைகளாலெல்லாம்,     (பார்க்குமிடத்தில்)     நீ-,    வறியை -
வறுமையையுடையாய்;  (அப்படியிருந்தும்  இத்தகைய நீ) எம்மை -
(மேலாகிய) எம்மை, ஆட்கொண்ட - அடிமையாகக் கொண்டருளிய,
வசியிது -   வசியமாகிய  இது,  பெரிது  -  பெருமையையுடையது,
எ-று. (131)

 132. என்று வானவ ரிறைவனை யிறைஞ்சுமப் பொழுதே
     யன்று மூவுல கத்துள வமரரும் வியப்ப
     நின்ற தோர்படி நிருமியா வரிவையர் சூழச்
     சென்ற னன்றர ணேந்திரன் சிறப்பொடும் விரைந்தே.

    (இ-ள்.)  என்று   -  என்றுசொல்லி,  வானவர்  -  தேவர்கள்,
இறைவனை  -   வைஜயந்த   பகவானை,  இறைஞ்சுமப்பொழுது  -
வணங்குகின்ற    அச்சமயத்தில்,    மூவுலகத்துள்ள    -    மூன்று
லோகத்திலுமுள்ள,    அமரரும்    -   தேவர்களும்,   வியப்ப   -
ஆச்சரியமடையும்படியாக,  நின்றது  -   நிலைபெற்றதாகிய,  ஓர்  -
ஒப்பற்ற,படி - உருவத்தை, நிருமியா - நிர்மாணம் பண்ணிக்கொண்டு,
அரிவையர்  -  தேவிமார்கள், சூழ - சூழும்படியாக, தரணேந்திரன் -
(பவணலோகத்துக் கதிபதியான) தரணேந்திரனென்பான், சிறப்பொடு -
பூஜாதிரவியத்தோடு,  விரைந்து  - சீக்கிரமாக, அன்று -அப்பொழுது,
சென்றனன் - அவ்விடம் வந்தடைந்தான், எ-று. (132)

வேறு.

 133. நிழலுமிழ்ந் திலங்கு மேனி நிறைமதி முகமுஞ் செம்பொற்
      கழலணிந் திலங்கும் பாதங் கமலங்கள் காம னேயுங்
      குழலணிந் திலங்கு நல்லார் வடிவினாற் குழைய வாங்குந்
      தழலுறுந் தன்மைத் தந்தத் தரணன துருவு தானே.

     (இ-ள்.) காமன்ஏயும் - மன்மதனைநிகர்த்த,  அந்தத் தரணனது
- அந்தத் தரணேந்திரனுடைய, மேனி - சரீரம், நிழல் - பிரகாசத்தை,
உமிழ்ந்து   -   சொரிந்து,   இலங்கும்   -  விளங்கும்,  முகமும் -
முகமானதும்,  நிறைமதி  -  ஸம்பூர்ணச்  சந்திரனுக்குச் சமானமாகும்,
செம்பொன்  -  சிவந்த  பொன்னாலாகிய,  கழல் - வீரகண்டயத்தை,
அணிந்து  -  தரித்து,  இலங்கும்  -  விளங்கும், பாதம் - பாதங்கள்,
கமலங்கள்  -  தாமரைப்  புஷ்பத்திற்குச்  சமமாகும், உருவு - (இந்த
அவயவங்கள்    சேர்ந்த    அவனது)    உருவமானது,    குழல் -
அளகபாரத்தை, அணிந்து - சீவி முடித்து