பக்கம் எண் :


98மேருமந்தர புராணம்  


 

யிலும்,   அருள்   - தயவு,   உம்மில்  - உங்கள் முன்னோர்களால்,
பெற்றுவந்த  -  அடைந்து வந்த, அந்த வினமிதன் குலத்தில் - அந்த
வினமி    வம்சத்திலே,    மின்     திகழ்தந்தன் -மின்னலைப்போல்
பிரகாசியாநின்ற   பற்களையுடைய   இவ்வித்துத்தந்தன், உள்ளான் -
உண்டானவனா யிராநின்றான், எ-று.                        (64)

205. நஞ்சுடை மரத்தை யேனு நட்டுநீ ரட்டி யாக்கி
    விஞ்சிய வதனைத் தாமே வீட்டுத லரிதி யார்க்கு
    மென்பதிவ் வுலகி னின்ற தறிதியே நீவிர் நட்ட
    விஞ்சையர் குலத்து மேனீ வெகுள்வதென் விடுக வென்றான்.

     (இ-ள்.)   நஞ்சுடை   -  விஷத்தையுடைய, மரத்தையேனும் -
மரத்தையானாலும், நட்டு - ஸ்தாபித்து, நீர் - ஜலத்தை, அட்டியாக்கி -
மிகவிட்டு,  விஞ்சியவதனை   -   மிஞ்சிவளர்ந்த   அதை,  தாமே -
தாங்களே, வீட்டுதல் - போக்கடித்தல் (அதாவது : வெட்டிப்போடுதல்),
யார்க்கும் -  எவ்வகைப்  பட்டவர்க்கும், அரிது - கூடாது, என்பது -
என்கிற   பழமொழி,   இவ்வுலகின்   -   இவ்வுலகத்தில், நின்றது -
நிலைபெற்றிருப்பதை, அறிதி -  நீ அறிவாயாக, (இஃதிப்படியிருந்தும்),
நீவிர்  -   நீங்கள்,   நட்ட  - ஸ்தாபித்த, விஞ்சையர் குலத்துமேல் -
வித்தியாதர குலத்தின்பேரில், நீ - நீ,வெகுள்வது - கோபிப்பது, என் -
என்ன?,  விடுக -  (இதனை)   விடக்கடவாய்,   என்றான்   - என்று
ஆதித்யாபதேவன் சொன்னான், எ-று.                        (65)

206. வினையற வெறிந்த வீரன் விதேகத்து வீத சோகந்
     தனையுடை வைசயந்தன் றன்மக னென்முன் றன்மைக்
     கினையவ னெவர்க்கு மேத மதத்தினு நினைத்தி டாதான்
     றனையிவை செய்தான் யாவ னாயினுந் தடிவன் கண்டாய்.

     (இ-ள்.) வினை - கருமங்களை, அற - (முழுதும்) நீங்க, எறிந்த
- கெடுத்த,  வீரன் - வீரனாகிய இச்சஞ்சயந்த பட்டாரகன், விதேகத்து
-  விதேக          க்ஷேத்திரத்து,         வீதசோகந்தனையுடை -
வீதசோகபுரத்ததிபதியான,    வைசயந்தன்     தன்     - வைஜயந்த
மகாராஜனுடைய,    மகன்    -     குமாரனாகிய, என்முன் - எனது
தமையனாகும்,   தன்மைக்கு   -    ஸ்வபாவத்தன்மை அடைவதற்கு,
இனையவன்   -   இப்படிப்     பொருந்திய தபஞ்செய்யப்பட்டவன்,
எவர்க்கும்  - எவர்களுக்கும், ஏதம் - பொல்லாங்குகளை, மனத்தினும்
- மனத்தினாலும்,   நினைத்திடாதான்    தனை - எண்ணாதவனாகிய
இவனுக்கு, இவை - இந்த உபசருக்கங்களை, செய்தான் - செய்தவன்,
யாவனாயினும்  -    எவனாயிருந்தபோதிலும்,   தடிவன்   -  யான் சிக்ஷைசெய்வேன், (என்று தரணேந்திரன் சொன்னான்.) எ- று.

கண்டாய் - அசை.                                       (66)