பக்கம் எண் :


1



சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருவாவடுதுறை ஆதீனம்
சிவஞான சுவாமிகள்
அருளிச் செய்த
காஞ்சிப் புராணம்
பொழிப்புரை

பாயிரம்
காப்பு

கலிநிலைத் துறை

இருக வுள்துளை வாக்குகார்க் கடங்கள் இங் குலிகக்
குருநி றத்திழி தோற்றமுன் குலாய்த்தவழ்ந் தேறிப்
பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலுந்
திருநி கர்த்தசீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்.

     ஐந்து திருக்கரங்களும் யானைமுகமும் உடைய விநாயகப் பெருமானாரது
இரு காதுகளின் வழி ஊற்றுகின்ற கரிய மதநீர் செந்நிற மார்பினிடமாக
ஒழுகுதல், சூரியன் மார்பில் அவன் மகனாகிய இயமனும், மகளாகிய
காளிந்தியும் தவழ்தலை ஒக்கும். இவ்வாறு காட்சி விளங்கும் அவ்விநாயகப்
பெருமான் திருவடிகளில் சரண் புகுவாம்.

     கவுள் - கன்னம். வாக்குதல் - வடித்தல். இங்குலிகம் - சாதிலிங்கம்; சிவப்புமாம். குரு-நிறம். நிறம்-மார்பு. தலவிநாயகர்

அறுசீரடியாசிரிய விருத்தம்

விகட சக்கர ஆரணந் தொடர்வரும் வித்தக முகில்வீற
விகட சக்கர விந்தமன் னவன் றனக் கருளுமெய்த் தலைவாகு
விகட சக்கர வாகமென் முலையுமை கான்முளை என்னாச்சே
விகட சக்கரர் எந்திர மெனச்சுழல் வெம்பவக் கடல்நெஞ்சே.    2