| 		 தன் வயத்தனாவன் (சுதந்திரன்). எல்லாம் அறிபவன் ஆகலின் எங்கணும்          விழி எனவும், எவ்விடமும் அவன் திருமுன்பு (சந்நிதி) ஆகலின் எங்கும்      முகம் எனவும், புடை பெயர்ச்சியின்றி நீக்கமற நிறைதலின் எங்கும் கால்      சங்கற்ப மாத்திரத்தாற் செய்தலின் (நங்கையினாற் செய்தளிப்பன் நாயகன்)      எங்கும் கரம் எனவும், சிதாகாய (ஞானம்) மே திருவுருவாகலின் எங்கணும்      எனவும், ஆசிரியர் அறிவினும் அணித்தாக விளங்கலின் இவன் எனவும்,      அருளாசிரியர் அறிவினும் அணித்தாக விளங்கலின் இவன் எனவும்,      அருளாசிரியர் அனைவரும் கண்ட வழக்காகலின் என்ப எனவும் கூறினர்.	 			அரியயன் அமரர்கள் அசுரர் யோகிகள்  		இருளறு வேதவே தாந்தம் யாரும்இப்  		பெரியவன் அடியிணை காணும் பெட்பினால்  		தெரிகிலர் மாறுகொண் டின்னுந் தேடுவார்.       28  | 	 		 	     திருமாலும், பிரமனும், தேவரும், அசுரரும், யோகியரும் மயக்கறுக்கும்         வேத, வேதாந்தங்களும் ஆகியோராகிய இவர் யாவரும் இப்பெரியோனைக்      காணும் விருப்பினால் முயன்று காண்கிலர் மாறுபாடுற்று இன்னமும் தேட      முயல்வர்.	      ‘அரிய காட்சியராய்த்தம தங்கைசேர், எரியர் ஏறுகந் தேறுவர்          கண்டமும், கரியர் காடுறை வாழ்க்கையர் ஆயினும், பெரியர் ஆரறிவாரவர்      பெற்றியே’.	      காணலாகா நிலையாற் காணலுற்றார் என்பார் ‘மாறு கொண்டு’ என்றனர்.         காணும் நிலையாவது; அவனருளே கண்ணாகக் காணுதல்.	 			அவனவள் அதுவெனும் அவைதொ றொன்றும்இச்  		சிவனலான் முத்தியிற் சேர்த்து வார்இலை  		துவளரும் இம்முறை சுருதி கூறுமால்  		இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்.         29 | 	 		 	     உலகம் முப்பகுப்பினது, அவையாவன: அவன், அவள், அது என்பன.          இம் முப்பகுப்புப் பிரபஞ்சத்தினும் கலந்து அவையேயாய் நிற்கும் சிவபிரான்      அன்றி முத்தியிற் சேர்ப்பவர் இல்லை; அவனே சேர்ப்பன். வேதங்கள்      இவ்வியல்பை உறுதி பெறக்கூறும். இவனடியை வழிபடின் முத்தியை      அடைவாய்.	      ‘அவன் அவள் அதுஎனும் அவை’ (சிவ. சூ.1) ஆசிரியர் திருவாக்கை         முன்னோர் மொழி பொருளொடு அவர்கள் மொழிகளையும் பொன்னேபோற்      போற்றிக் கொள்ளுதல் என்க.	 			பன்னுவ தெவன்பல பரிந்து நெஞ்சினும்  		அந்நியர் தமைஒழித் தரனை ஏத்துதி  		இன்னதே வீட்டினுக்கேது வாமெனும்  		பொன்னுரை மனக்கொடு புகலு வான்சிவி.      30  | 	 		 		 |