பக்கம் எண் :


367


தக்கேசப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

விரவினோர் தணக்க லாற்றா விடுவச்சே னேச்ச ரத்தின்
வரவினைத் தெரிந்த வாறு வகுத்தெடுத் துரைத்தேம் இப்பால்
இரவெரி ஆடும் எம்மான் இனிதமர் அதன்கீழ்ப் பாங்கர்க்
கரவிலார்க் கருளுந் தக்கேச் சரத்தியல் கட்டு ரைப்பாம்.     1

     மேவினார் பிரிய ஒண்ணாத விடுவச்சேனேச்சரத்தின் வரலாற்றினைத்
தெரிந்த அளவு கோவைப் படுத்திக் கூறினோம். இனி, நள்ளிருளில் எரியை
ஏந்தி நட்டம் பயிலும் எமது பெருமான் இனிது வீற்றிருக்கும் அதன் கிழக்கில்
கரவிலவர்பால் வந்தருள் செய்யும் தக்கேச்சரத்தின் இயல்பினை
விரித்துரைப்போம்.

தக்கன் மைந்தரை நாரதர் தவத்திற் செலுத்தல்

பொறிவரிச் சுரும்பு மூசப் புரிமுறுக் குடைந்து விள்ளுஞ்
செறிஇதழ்ப் புழற்கால் கஞ்சத் திருமலர்ப் பொகுட்டு வாழ்க்கை
அறிவன தேவ லாற்றால் அடல்வலித் தக்கன் என்போன்
மறிவரு வரத்தாற் பல்லோர் மைந்தரைப் படைத்தான் மன்னோ.  2

     புள்ளிகளையும், வரிகளையும் உடைய வண்டுகள் மொய்ப்பப்
பிணிப்பவிழ்ந்து மலரும் நெருங்கிய இதழ்களையுடைய உட்டுளை பொருந்திய
தண்டின் அமைந்த தெய்வத் தன்மை மருவிய தாமரை மலர்ப்பொகுட்டுறை
பிரமன் உபதேசப்படி பெருவன்மை படைத்த தக்கன் எனப்படுவோன்
கேடிலாத தவத்தினால் மைந்தர்கள் பலரைச் சிருட்டிசெய்தனன்.

அங்கவர் தக்கன் ஏவ லாற்றினாற் படைப்பான் எண்ணித்
தங்களுள் முயலுங் காலைத் தந்திரிக் கருவிச் சால்பின்
நங்கையோர் பாகற் பேணும் நாரதன் அவர்பால் தோன்றி
இங்குநீர் உழக்குஞ் செய்கை என்னெனக் கடாவ அன்னோர்.  3

     தந்தையாகிய தக்கன் சொல்வழித் தனயர்கள் சிருட்டித் தொழில்
பெறத் தாங்கள் யாவரும் தவம்செய்வுழி நரம்பினையுடைய மகதியாழாகிய
கருவியினால் உமையொரு கூறனைப் பொருந்துமாறு துதிக்கும் நாரதர் அவர்
முன் வெளிப்பட்டு இப்பொழுது நீவிர் முயலுந் தவத்தினுடைய குறிக்கோள்
எவை’ என வினவ அத்தன்மையோர்,

     பெருவிதி ஏவ்லிற் சிறுவிதியும், அன்னோன்ஏவலின் அவன் மக்களும்
சிருட்டித் தொழிலில் விருப்பம் வைத்தனர்.

படைமின்என்றெம்மைத்தாதைபணித்தனன் படைக்கும்ஆற்றல்
அடைவெமக் கருளிச் செய்யாய் ஐயஎன் றிறுத்தார் கேளா
நடைநெறி பிறழா வாய்மை நாரதன் மகதி நல்யா
ழுடையவன் அனையார் தேறச் செவியறி வுறுக்க லுற்றான்.   4