பக்கம் எண் :


499


     ‘வேள்வி, தவம், தானம், விரதநிலை என்னும் இவற்றானாகப்
பிறவற்றானாக நியதியாகச் செய்யும் பூசனைப் பயன்கள் யாவும் சிவலிங்க
பூசனையினால் விளையும் பயனுக்குக் கோடியிலோர் கூறும் ஒப்பாகா. பரந்த
உலகிற் பல்லுயிரும் பிழைக்கும்வகை இங்ஙனம் நமது ஆணையைச் செல
வுய்த்தேம். இதனை மனங்கொண்டு பிழைப்பீராக’ என்றருள் செய்து
பெருமானார் அடியவர் திருவுள்ளமாகிய கோயிலில் புகுந்தனர்,

     பாப்பணையில் துயில்வோனும் பனிமலரிற் பயில்வோனும்
பணிந்து நீங்கி, யாப்பமைநீர்த் தடம்பொய்கைத் திருக்காஞ்சி
வளநகரம் எய்தி ஆங்கண், மீப்பொலிவும் மகாலிங்கம் நிறீஇத்
தொழுது பயன்பெற்றார் விரிநீர் வைப்பின், நீப்பரிய சிவலிங்க
வழிபாட்டின் பேறெவரே நிகழ்த்த வல்லார்.                 23

     திருமாலும், பிரமனும் வணங்கி விடைகொண்டு கரையமைந்த
தடாகங்கள் கொண்ட திருக்காஞ்சி வளநகரை எய்தி அங்குமேன்மை பெற
விளங்கும் மகாலிங்கம் நிறுவிப் பூசனையைப் புரிந்து பயனடைந்தனர்.
கடல் சூழ்ந்த நிலவுலகில் கைவிடுதற்கரிய சிவலிங்க வழிபாட்டின் பேற்றினை
யாவரே கூறவல்லவர்.

மகாலிங்கப் படலம் முற்றிற்று

ஆகத் திருவிருத்தம்-1691

வீராட்டகாசப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     தண்காமர் புனல்குடையுந் தையலார் நிமிர்ந்தநறுந் தகர
ஞாழல், எண்காதங் கமழ்இலஞ்சி மகாலிங்கத் தளிபுகன்றாம் இதன்வ
டாது, விண்காவ லுடையார்முன் இளநகைபூத் திவ்வாலம் விடுக்கா
அன்றி, உண்காஎன் றருள்செய்தான் வீராட்டகாசநகர் உரைத்து
மாலோ.                                               1

     தண்ணிய விருப்பம் வரு நீரிற்றுளையும் அழகிய மகளிர் பூசிய நறிய
தகரமும் குங்குமமும் ஆகிய வாசனைப் பண்டங்கள் நெடுந்தொலைவு
மணக்கும் பொய்கைக் கரையில் அமைந்த மகாலிங்கேசர் வரலாற்றினைக்
கூறினோம். இதன் வடக்குத் திசையில் தேவர்களைப் புன்சிரிப்போடும்
நோக்கி இவ்விடத்தை எறிகோ அன்றி உண்கோ கூறுமின் என வினவிய
பெருமான் தன் வீராட்டகாசத்தின் வரலாற்றை உரைப்போம்.