பக்கம் எண் :


502காஞ்சிப் புராணம்


     மெய்த்தவங்கள் இனிதாற்றிப் பேறுற்றான் இன்னும்அவண்
மேவிச் சீர்சால், சித்திகளை உழவாது பெறுகின்றோர் எல்லைஇலர்
செந்நீர் தேக்கும், முத்தலைவேல் வீராட்டகாசேசன் மேன்மைஎவர்
மொழிவார் மாயன், அத்தலத்தே வழிபட்டுப் பவளநிறம் பெற்றான்
அவ் வகையுஞ் சொல்வாம்.                                8

     மெய்த்தவங்கள் இனிதியற்றிப் பேற்றினைப் பெற்றனர். மேலும்,
அங்கிருந்து சிறப்பமைந்த சித்திகளை எளிதிற் பெறுகின்றோர் அளப்பிலர்.
இரத்தத்தை நிரப்பும் முப் பகுப்புடைய சூலமுடைய வீராட்டகாச ஈசன்
மேன்மையை யாவர் கூற வல்லவர். மாயன் அப்பிரானை வழிபாடு செய்து
பவளம் போலும் செந்நிறத்தைப் பெற்றனர். அத்திறத் தினையும் கூறுவாம்,

திருமால் பவளநிறம்பெற்ற வரலாறு

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     விரிதிரை சுருட்டிக் கரைமிசை எறியும் வெள்ளிவெண் பாற்கடல்
வரைப்பின், எரிமணி மாடப் போகமா புரத்தின் எய்தருந் தனியிடத்
திருந்து, புரிமுறுக் குடைந்து நறவுகொப் புளிக்கும் பூந்தவி
சணங்கினோ டிணங்கி, வரிவளைக் குடங்கை வானவன் விளையாட்
டியற்கையுள் மகிழ்வுறும் ஒருநாள்.                           9

     விரிந்த திரை மறித்துக் கரைமேல் வீசும் மிக வெள்ளிய திருப்பாற்
கடலினிடத்து மாணிக்கங்கள் பதித்த போகமாபுரத்தில் பிறரணுகலாகாத
அந்தப்புரத்தில் பாஞ்ச சன்னியத்தை உள்ளங்கைக் கொண்ட திருமால்
கட்டவிழ்ந்து தேனூறும் மலர்த் தவிசில் விளங்கும் இலக்குமி யோடிருந்து
பொழுது போக்காக விளையாடி மகிழ்வுறும் ஓர் நாளில்,

     மாயிரு ஞால முழுதும்ஈன் றளித்து மனைவியும் மணாளனு
மாயோர், ஆயிடைப்பொழுது கழிப்பிய தம்முட்கதைசில அறைகுவான்
அமைந்தார், பாயபாப் பணையில் அறிதுயில் அமர்வோன் பனிமலர்க்
கிழத்தியை நோக்கித், தேயும்நுண் நுசுப்பின் அகன்றபே ரல்குல்
ஒருகதை கேளெனச் செப்பும்.                              10

     மிகப்பெரிய உலகம் முழுவதும் படைத்துக் காத்து மனைவியும்
கணவனும் ஆகியோர் அவ்விளையாட்டிற் பொழுதினைப் போக்குதற்
பொருட்டுத் தம்மிற் கதை சில கூறலுற்றனர். ஆதிசேடனாகிய விரிந்த
பாயலில் யோக நித்திரை செய்யும் மால் மனைவியை நோக்கி மெலியும்
நுண்ணிய இடையினையும் அகன்ற பேரல்குலையும் உடையோய்! ஓர்
கதையைக் கேள் எனக் கூறுவர்.

     நன்னிறம் படைத்த நாமநீர்ப் பரவை நளிதிரைப் பாற்கடல்
மாமை, புன்னிறந் தோற்ற வெள்ளொளி விரிக்கும் புகரறு கயிலை