விந்துவை ஒப்ப விளங்கி அம்மையார் வீற்றிருக்கும் அகன்ற அழகிய சக்கர வடிவமாகும் அந்த உயரிய பிலாகாயமே மேற்கூறிய காமம் அனைத்தினுக்கும் ஆதாரமாகிப் பந்தத்தை இல்லையாகச் செய்கின்ற காமக்கோட்டம் எனப்படும் ஒப்பற்ற பெயரைத் தாங்கிடும். சத்திபீடங்கள் அறுபத்து மூன்றற்கும் முன்னே வைத்தெண்ணப்படும் பீடம் ஆதலின் ஆதிபீடம் என்றும் சொல்லப்படும். எவற்றினுக்கும் என்பது அறுபத்து மூன்று சத்தி பீடங்களை என்க. திருமகள் வழிபாடு எண்சீரடி யாசிரிய விருத்தம் இனைய தாகிய திருப்பிலம் அதனை எழால்மி டற்றிளஞ் சுருப்பினம் முரலும், நனைக லுழ்ந்தலர் மலர்த்தவி சிருக்கை நகைம லர்க்கொடி கண்டுகை தொழுதே, அனைய சூழலின் இடப்புறம் வைகி அடங்க லார்புரம் அழலெழச் சிரித்த, முனைவ னார்க்கொரு சத்தியாய் இன்பாய் முழுது மாகிய அகிலகா ரணியை. 41 இத்தன்மையதாகிய பிலத்தை யாழ்போலும் கண்டத்தையுடைய இளைய வண்டுகள் ஒலிக்கும்: தேனைச் சொரிந்து மலரும் தாமரையை இடனாகவுடைய பூத்த மலர்க்கொடியை ஒக்கும் திருமகள் கண்டு கையாற்றொழுது அந்த இடத்தின் இடப்புறத்திற் றங்கிப் பகைவருடைய முப்புரம் நீறுபடப் புன்முறுவல் பூத்த முதல்வர்க்கு ஒப்பற்ற சத்தியாகியும் இன்ப வடிவாகியும், எல்லாமாகியும் உள்ள உலகத்திற்குக் காரணமாய் நிற்கும் அம்மையை, பாதம் ஒன்றொடு நிவிர்த்தியால் தரைக்கண் பதம்இ ரண்டொடு பதிட்டையால் புனற்கண், பாதம் நான்கொடு வித்தையால் கனற்கண் பதங்கள் எட்டொடு சாந்தியால் வளிக்கண், பாதம் ஒன்பத னொடுவெளிப் பரப்பிற் பகருஞ் சாந்தியின் அதீதமாங் கலையாற், பாதம் ஆயிரத் தொடுபர வெளிக்கண் பயிலும் அக்கரத் தனிமுதற் பரையை. 42 பூமியில் நிவிர்த்தி கலையால் பாதம் ஒன்றுடனும், நீரிடை பிரதிட்டா கலையால் பாதங்கள் இரண்டுடனும், நெருப்பிடை வித்தியா கலையால் பாதங்கள் நான்குடனும், காற்றில் சாந்தி கலையால் பாதங்கள் எட்டுடனும், வானில் சாந்தி அதீத கலையால் பாதங்கள் ஒன்பதுடனும் பர வெளியில் பாதங்கள் ஆயிரங்களோடும் விளங்கா நிற்கும் எழுத்துக்களுக்கு ஒப்பற்ற முதல்வியாம் பராசத்தியை, கருமை செம்மைவெண் ணிறமுடை யாளைக் காமக் கோடிவான் பிலவடி வாளை, அருவி தாழ்குவட் டணிமலை மகளை மாயை யோடுல கனைத்தும்ஈன் றாளை, உருகி நெக்குநெக் குளப்பெருங் கோயி லுள்ளு றுத்திஎன் உடம்பினைப் பொதிந்து, மருவும் இக்கருநிறஞ்செதிள் எடுப்பான் கருணை செய்கென வழிபட லுற்றாள். 43 |