83

அகலிகை சாபநீக்கம்

வான்மீகம்

விசுவாமித்திரர்  இராம  இலக்குவர்களுக்கு  அகலிகையின்   சாப
வரலாற்றை உரைக்கிறார்.

ஒரு   நாள் கௌதமர் அங்கிருந்து (ஆசிரமத்திலிருந்து) தூரமாகச்
சென்றிருந்தபோது,  அச்செவ்வியை  அறிந்த  இந்திரன், அங்கு வந்து
அகலிகையை   நோக்கி,   “இடையழகியே,  காம   வயப்பட்டவர்கள்,
பெண்களின்  கலவிக்கேற்ற  சமயத்துக்காக காத்திரார்; நான்  உன்னை
அடைய விரும்புகிறேன்” என்றான். கௌதம வேடம் பூண்டு வந்தவன்
இந்திரன்  என  அறிந்தே அந்தத் துர்ப்புத்தியுடையவள், தேவர்களின்
அரசனே   தன்னை   விரும்பி   வந்துள்ளான்   என்று  பெருமிதம்
எய்தியவளாய்   அவன்    விருப்பத்திற்கு   ஆட்பட்டாள்.  பின்னர்
மகிழ்ந்த   உள்ளத்தளாய்,   “வனவரேறே,  மிகவும்  தன்யளானேன்,
மானத்தைக்   காப்பவரே,   உம்மையும்  என்னயும்  வெளிப்படாமல்
காத்துக்   கொள்வீராக;   இங்கிருந்து   விரைந்து  செல்வீராக”  என
வேண்டினாள்.  இந்திரனும்  சிரித்தவாறே,  “அழகிய ஜகனமுடையாய்,
மிகவும் திருப்தியடைந்தவனாக, வந்த வழியே திரும்பிச்  செல்கிறேன்”
எனக்  கூறி  வெளியே  வந்தவன்  ஆசிரமம்  நோக்கி நீராடி வரும்
கௌதம  முனிவரைக்  கண்டதும்  நடுங்கித்  தலை குனிந்தான். ரிஷி
வேடந் தாங்கியவனை இன்னானென உணர்ந்த கௌதமன்  வெகுண்டு,
“தீய  சிந்தையுள்ளவனே, என் உருவம் எடுத்துச்  செய்யத் தகாததைச்
செய்த  நீ  விருட்சணங்கள்  இழந்தவனாவாய்,” எனச்  சபித்தான். (1.
48:18-30)  பின்னர்  அகலிகையை  நோக்கி,  “நீ ஆயிரமாண்டுகளாக
இங்கேயே  கல்லாய்ச்  சமைந்து காற்றையே ஆகாரமாக உட்கொண்டு,
உள்ளத்  தவிப்புடன்  புழுதி மூடி எவ்வுயிர்க்கும் புலப்படாதவளாய்க்
கிடப்பாயாக.   எக்காலத்தே   தசரத   இராமன்  இந்தக்  காட்டிற்கு
வருகிறாரோ    அப்போது   தூய்மையடைந்து,  அவருக்கு   அதிதி
பூசையியற்றி  அறந்துறந்த ஆசையை ஒழித்துக் கண்மூடித்தனம் நீங்கி
உன்   சொந்த   வடிவம்  பெற்று  என்னை  வந்தடைவாய்”  எனக்
கௌதமன்   சபித்தான்.  (1.48:32-35)  பின்னர்  இந்திரன்  சாபத்தால்
நொந்து மீண்ட வரலாற்றை விரி