பிரேமா கோவிந்தசாமி, மற்றும் உடுமலைப்பேட்டை ஸ்ரீ வேங்கடேசா காகித ஆலை நிர்வாகத் தலைவர் திரு. கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் மனமுவந்து இந்தத் திருப்பணியில் பங்கு கொள்கின்றனர். "உள தாகும் சாக்காடு" என்று வள்ளுவர் சொன்னவாறு புறத்தே மறைந்தும் அகத்தே மறையாது நிலவும் பேரா.அர.சு. நாராயணசாமி நினைவு நிதியும் இப்பணிக்கு உதவியது. நிதி மிகுந்தவர் அந்நிதி நற்பணிக்கே உரியதென்று தெளிவுற்று உதவுதலாலன்றோ இவ்வுலகம் தழைக்கின்றது! பேரா.அ.ச.ஞா.வுக்குக் கண்ணும் கரமுமாக அமைந்து திருப்பணி பரியும் திரு. நா. சந்திரசேகரன் இப்பணி இயந்திரத்தின் ஒரு பல்-சக்கரம். உரையாசிரியர்கள் இலரெனில் இந்தக் காப்பிய மாளிகை மதுரை மீனாட்சி கோவில் போல்-அரங்கன் கோவில்போல் காட்சியளித்திருக்கமா! ஊர் கூடி இழுத்த தேர் - தமிழ் நெஞ்சங்களின் நினைவு வீதிகளில் உலா வருகிறது. தெய்வ மாக் கவி தரிசனம் பெற்று, அலகிலா விளையாட்டுடைய ஆதிமூர்த்தியின் அருளைப் பெற்றிடத் தமிழறிந்தோர் யாவரையும் ‘சேர வாரும்’ எனக் கரம் கூப்பி வரவேற்கிறோம். ம.ரா.போ. குருசாமி ஒருங்கிணைப்பாளர், இணைப் பதிப்பாசிரியர் |