17

     அறம் தலை நிறுத்தி, தீயோர் இறந்துஉக நூறி தூயவர் துயர் துடைக்கப்
பிறந்தவன் அப்பெருமான். தீயோர் அழிவும், தூயவர் துயர் துடைப்பும்
பின்னிப் பிணைந்துள்ளன. தீயவர் அழிவில் தான் தூயவர் துயர் துடைப்பு
இணைந்துள்ளது. கரன், தூடணன் முதலியோரில் தொடங்கி இராவணன் வரை
அழிக்கப்பட வேண்டும். இவர்கள் தீயவர்கள் என்பது உலகறிந்த உண்மை.
தீயரே எனினும், மாதவங்கள் செய்து எண்ணரிய வரங்களைப்
பெற்றுள்ளவர்கள். புலனடக்கம் செய்து மாபெரும் தவத்தை மேற்கொண்டு
அளவற்ற வரங்களைப் பெற்றார்கள் என்றால், இவர்கள் சாதாரணமானவர்கள்
அல்லர். காட்டிள்ள முனிவருக்கும் இருடிகட்கும் காரணமின்றி இவர்கள்
தீங்கிழைத்தனர் என்பதும் உண்மைதான். வர பலம் பெற்ற இவர்கள் ஏன்
முனிவர் முதலாயினோர்க்குத் தீங்கிழைக்க வேண்டும்? இவ்வினா
நியாயமானதேயாகும். தேவர்கட்கும் அசுரர்கட்கும் பரம்பரையாகப் பகைமை
உண்டு. முனிவர்கள் தாம் மேற்கொண்ட கேள்விகளை முற்றித் தேவர்களாக
ஆகப்போகிறார்கள். எனவே, அசுரர்களின் உறவினராகிய அரக்கர்கள்
இம்முனிவர்களையும் அவர்கள் மேற்கொண்டுள்ள வேள்விகளையும் அழிக்க
முயல்வதில் வியப்பு ஒன்றுமில்லை. பெருந்தவங்கள் செய்து சாப, அனுக்கிரக
ஆற்றலைப் பெற்றுள்ள இம்முனிவர்கள் தம் ஆற்றலால் இவ் அரக்கர்களை
ஏன் அழிக்கவில்லை? அதன் மறுதலையாக இறைவனை வேண்டி, அவன்
கீழிறங்கிவந்து அரககருடன் போர் செய்யவேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது?
இவ்வினாவிற்கு விடை காண்பது சற்றுக் கடினம் தான் என்றாலும், சில
அடிப்படைகளை நினைவிற்குக் கொண்டு வருவதில் தவறில்லை.

     வர பலம் என்று எடுத்துக்கொண்டால், இம்முனிவர்கள்
இவ்வரக்கர்களின் வரபலத்திற்குச் சமமாகவோ அன்றி அதிகமாகவோ கூடப்
பெற்றிருக்கின்றனர். என்றாலும், அவ்வரத்தைப் பயன்படுத்தித் தம்
பகைவர்களை அழிக்க விரும்பவில்லை. பகைவர்களேயாயினும், ஓயாமல்
தமக்குத் தீங்கிழைப்பவர்களேயாயினும் அவர்களுடன் மாறுபட்டுப்
போரிடுவதிலும், சாபமிடுவதிலும் தம் ஆற்றலைச் செலவழிக்க அப்பெருமக்கள்
விரும்பவில்லை. அவர்களுடைய புலனடக்கமும் தவபலமும் பிறர் செய்யும்
துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளவும் மனத்தில் காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
இருக்கவும் பயன்பட்டன. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் தம்பால்
முடிந்த போதும்கூடத் தமக்குத் தீங்கிழைக்கும் அரக்கர்களை அவர்கள்
ஒடுக்க முன்வரவில்லை. மேலும் ஒருவரை அழித்தல் என்பது முத்தொழிலை
உடைய பரம்பொருளுக்கு உரியதே தவிர மனிதர்களாகிய தமக்கு
அவ்வுரிமை இல்லையென