பக்கம் எண் :

76பால காண்டம்  

கோலிடை     உலகம் அளத்தலின்- செங்கோலால் உலகத்தைக்
காப்பதாலும்    (அளவுகோலால்    அளக்கப்படுதலாலும்);   பகைஞர்
முடித்தலை  கோடலின்
-  பகை   மன்னரின் மகுடமணிந்த தலைகளை
அழிப்பதாலும்     (தன்னிடமுள்ள       இயந்திரங்களால்    பகைவர்
தலைகளைத்   துணிப்பதாலும்);    மனுவின்   நூல்நெறி   நடக்கும்
செவ்வையின்
-   மனுநூல்   நெறிப்படி    நடக்கின்ற  நேர்மையாலும்
(சிற்பநூலின்படி  அமைந்து  நேராயிருப்பதலும்);  யார்க்கும்  நோக்க
அரும்   காவலின்
-   எவருக்கும்   பார்க்க   இயலாதபடி   காக்கும்
திறமையாலும் (எளிதில் எவரும் காண இயலாத  காவல் உடையதாலும்);
வலியின்  வேலொடு வாள்வில் பயிற்றலின்
-  வலிமை  மிக்க  வேல்
முதலிய  படைக்கலப்பயிற்சி உடைமையாலும்  (வீரர்கள் வேல் முதலிய
படைக்  கலங்களைப்  பயில்வதாலும்); வெய்ய சூழ்ச்சியின் - கொடிய
தந்திரம்  கொண்டிருப்பதாலும்;  வெலற்கருவலத்தின்-  மற்றவர்களால்
வெல்ல  இயலாத  வல்லமை  உடையதாலும்;  சால்புடை  உயர்வின்-
சிறப்பு  மிக்க  உயர்வுடைமையாலும்;  சக்கரம் நடத்தும் தன்மையின்-
ஆணை  செலுத்தும்  தன்மையாலும்;  தலைவர் ஒத்து உளது- அந்த
மதில் (சூரிய குலத்) தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சூரிய    குலத்துத் தலைவர்களுக்கும். மதிலுக்கும் சிலேடை மூலமாக
உவமை  கூறியிருப்பதால்  சிலேடை  உவமையணியாகும்.    சால்புடை
உயர்வு: உயரத்துக்கு இடமில்லை என்னும்படி உயர்தல்.   மனுநூல் நெறி
நடத்தல்   மன்னருக்குரியது.  ‘மனு’  என்ற  சிற்ப  நூல்    வல்லாரின்
நெறிப்படி  அமைதல் மதிலுக்கு உரியது. வெய்ய சூழ்ச்சி:   வெளியோர்
எளிதில்     நுழைய     இயலாத     வாயில்     முதலியவைகளைக்
கொண்டிருப்பதாகும்.                                        11
 

104.சினத்து அயில். கொலை வாள். சிலை. மழு. தண்டு.
   சக்கரம். தோமரம். உலக்கை.
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல்.
   என்று இவை கணிப்பு இல: கொதுகின்
இனத்தையும். உவணத்து இறையையும்.
   இயங்கும் காலையும். இதம் அல நினைவார்
மனத்தையும். எறியும் பொறி உள என்றால்.
   மற்று இனி உணர்த்துவது எவனோ?

 

சினத்தயில்     கொலைவாள்- சினம் மிக்க வேலும். பகைவரைக்
கொல்லும் வாளும்; சிலை. மழு. தண்டு சக்கரம் தோமரம் உலக்கை-
வில்லும் மழுவும் கதையும் சக்கரம் தோமரம்.  உலக்கை  ஆகியவையும்;
கனத்திடை உருமின்  வெருவரும் கவண்கல்
- மேகத்திலுள்ள இடியும்
அஞ்சும்படியான  கவண்கல்லும்;  என்று  இவை கணிப்புஇல- என்று
கூறப்படும்   படைக்கலங்கள்.   அளவிட   முடியாதவை;   கொதுகின்
இனத்தையும்
- கொசுக்களின் கூட்டத்தையும்; உவணத்து  இறையை