14

யின் ஒவ்வொரு கட்டத்திலும் உணரமுடிந்தது,  உண்மை;  வெறுஞ்சொல்
அலங்காரம் அன்று.

     செந்தமிழருட்  செம்மல் டாக்டர் கோவிந்தசாமி இட்ட கடைகால்,
அந்த அளவிலே  நின்றுவிடாமல், மேல் தொடர்ந்து  கவிச்சக்கரவர்த்தியின்
கவிதைத் திருவுள்ளம் எழுந்தருளியுள்ள இம்மாபெரும்ஆலயத்தை
உருவாக்கும் கம்பன் அறநெறிச் செம்மல் திருமிகு  ஜி.கே. சுந்தரம்
அவர்களின் தளராஊக்கம்  மறக்கக் கூடியதன்று;ஒவ்வொரு கட்டத்திலும்
எழக்கூடிய  சிக்கல்களை முன்னிறுத்திக் காட்டி, அவற்றை  நீக்க வழியும்
வகுப்பவர்  அவரே.

     அடுத்து,  இம்முயற்சிக்குப்  பிள்ளையார் சுழி  இட்ட நல்லாசிரியர்
இ. வேங்கடேசலுவுக்குவணக்கம் செறித்த நன்றி உரியது.  பரமபாகவதராகிய
திரு. ஆர். துரைசாமி நாயுடு,  சேவாரத்தினடாக்டர் ஆர்.  வேங்கடேசலு
நாயுடு இளமைப் பொலிவுக்கு ஆக்கமான முயற்சிகொண்ட திரு. கிருஷ்ணராஜ்
வாணவராயர் - இவர்கள் இயக்கவே இயங்குவது இத்திட்டம். செந்தமிழருட்
செம்மல் மறைந்தாலும், அவர் வழியை மறவாத திருமதி பிரேமா
கோவிந்தசாமி, மற்றும் உடுமலைப்பேட்டை ஸ்ரீ வேங்கடேசாகாகித ஆலை
நிர்வாகத் தலைவர் திரு. கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் மனமுவந்து 
இந்தத் திருப்பணியில்பங்கு கொள்கின்றனர்.  "உளதாகும் சாக்காடு" என்று
வள்ளுவர் சொன்னவாறு புறத்தே  மறைந்தும் அகத்தே மறையாது  நிலவும்
பேரா. அர.சு. நாராயண சாமி நினைவு நிதியும் இப்பணிக்கு உதவியது. நிதி
மிகுந்தவர் அந்நிதி நற்பணிக்கே உரியதென்று தெளிவுற்று உதவுதலாலன்றோ
இவ்வுலகம்  தழைக்கின்றது!

     பேரா. அ.ச. ஞா. வுக்குக் கண்ணும் கரமுமாக அமைந்து  திருப்பணி
புரியும் திரு. நா. சந்திரசேகரன்இப்பணி இயந்திரத்தின் ஒரு பல் - சக்கரம்.

     உரையாசிரியர்கள் இலரெனில்  இந்தக் காப்பிய மாளிகை  மதுரை
மீனாட்சி கோவில்போல் - அரங்கன் கோவில்போல் காட்சியளித்திருக்குமா!

     ஊர்க்கூடி  இழுத்த தேர் - தமிழ் நெஞ்சங்களின் நினைவு வீதிகளில்
உலா வருகிறது.  தெய்வமாக்கவி தரிசனம் பெற்று,  அலகிலா
விளையாட்டுடைய  ஆதிமூர்த்தியின் அருளைப் பெற்றிடத் தமிழறிந்தோர் 
யாவரையும் ‘சேர வாரும்’ எனக் கரம் கூப்பி வரவேற்கிறோம்.

ம. ரா. போ. குருசாமி
ஒருங்கிணைப்பாளர்.