ராண்டிலும் பகலும் இரவும் முப்பது
முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில்
ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள்
முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொரு காலத்தில்
ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு
எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர்பெற்ற சோதிட வாசிரியர்
தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை
அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர்.
போதி - அரசமரம்; போதத்தையுடைய தென்பது
பொருள் ; போதம்-ஞானம்; இதனடியிலிருந்தபொழுது நால்வகை வாய்மைகளையும்
அறிந்து கொள்ளுதற்குரிய ஞானத்தைப்புத்தன் அடைந்தமை யால், இஃது இப் பெயர்
பெற்றதென்பர் ; போதியுரவோன், போதித்தலைவன், போதிமாதவன் என்றிஙஙனம்
இந் நூலுட் பல விடத்துப் பின் கூறப்படுதலும்காண்க. அரசு மரங்களுட்சிறந்ததென்பது
பகவற்கீதை முதலியவற்றானும் அறியப்படும். போதி என்பது ஞானம் என்ற
பொருளில் வருதலும் உண்டு.
அமுத சுரபி-அமுதத்தைக் கொடுக்கும் காமதேனுவைப்
போன்ற தென்பது பொருள் ; சுரபி-பசு; இனி, சுரபி-மணம் எனக் கொண்டு, அமிழ்தம்
போன்ற மணமுடைய தென்றும் பொருள் கூறுவர்.
46--52.
அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது அந்த நன்னாளும் இந்நாளே அது தோன்றும்பொழுதும்
இப்பொழுதே ஆகலின், நின்னாங்கு வருவதுபோலும் நேரிழை-நேரிழாய் அது நின்
கையிடத்து வருவதுபோலும், ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து-அப் பாத்திரத்திலிட்ட
அரிய உயிரின் மருந்தாகிய அன்னம், வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது-வாங்குவோர்
களுடைய கையிடத்தை வருத்துதல் அன்றி, தான் தொலைவில்லாத் தகைமையது ஆகும்-தான்
அழவில்லாத இயல்பினையுடைய தாகும், நறுமலர்க் கோதை-மணம் மிக்க மலர்மாலையினை
யணிந்த நங்காய், நின்னூர் ஆங்கண் - நின் பதியின்கண் அறவணன் தன் பால்
கேட்குவை இதன் திறம்-அறவணவடி
களிடத்தில் இப்பாத்திரத்தின் வரலாற்றினைக் கேட்பாய் ;
ஆருயிர்மருந்து-அடிசில்; உயிர்களைப் பாதுகாத்தலின்
இங்ஙனம் கூறப்பட்டது ; "அகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து" (11 : 117)
என்பர் பின்னும் ; 1"இருமருந்து
விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" என்பதனால் சோறும் நீரும் இருமருந்தெனப்படுதல்
காண்க. தான் என்றது சோற்றை.
1
புறம். 70.
|