தருமதலைவன்-தருமராசன்; புத்தன் பெயர்களுள்
ஒன்று. நோன் பினராய்க் கண்டு தொழுவோர் என்றலுமாம். அவர்க்கு அறமொழி
உரியது என்பது அவர் அறமொழி கேட்டற்குரியர் என்றபடி.
36--9.
ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள் - அத் தன்மையை உடையையாகிய
அணியிழையே இதனைக் கேட்பாயாக ஈங்கு இப்பெரும் பெயர்ப் பீடிகை முன்னது-பெரும்புகழுடைய
இப் பீடத்தின் முன்னிடத்தாகிய மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய- அழகிய
குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் கலந்து விளங்கு கின்ற, கோமுகி என்னும்
கொழுநீர் இலஞ்சி-கோமுகி என்னும் பெயருடைய அழகிய நீரையுடைய பொய்கையின்கண்
;
ஆங்ஙனமாகிய அணியிழை என்றது அறமொழி கேட்டற்கு
உரிமையுடைய என்றபடி பெயர் - புகழ். பெரும் பெயர்ப்பீடிகை - வீடு பயக்கும்
பீடிகையுமாம் முன்னதாகிய இலஞ்சியில் என்க.
40--5.இருது இளவேனிலில்
எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித்
திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து
அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற
பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்பதாகிய விசாகத்தின்கண்,
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும்,
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த
அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய
பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக ;
இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில்
பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில்
- சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்-
வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை
மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண்
முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும்.
புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில்
ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி ''போதித் தலைவனொடு பொருந்தித்
தோன்றும்'' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15
: 23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள்
எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று.
ஒவ்வோ
|