பக்கம் எண் :

பக்கம் எண் :152

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை
 

53--60.  என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி-என்று தீவதிலகை மொழிதலும் மணிமேகலை அதனை விரும்பி, மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி-பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கி, தீவதிலகை தன்னொடும் கூடி-தீவதிலகை யொடுஞ் சேர்ந்து, கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்-கோமுகிப் பொய்கையை வலம்வந்து நியமத்தோடு நிற்றலும், எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழும் தகை மரபிற் பாத்திரம் புகுதலும்-அனைவரும் தொழத்தக்க மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையினின்றும் எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளிற் புகுதலும், பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை இன்றி மனமகிழ்வு எய்தி-பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மனமகிழ்ச்சி யடைந்து ;

பாத்திரம் எழுந்து செங்கையிற் புகுதலும் என்க.

61--72.மாரனை வெல்லும் வீர நின் அடி-மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி-தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி-ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோனே நின் திருவடிகளை, துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி-சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி - மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி - உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடிகளை, தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி - தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை யுடையோனே நின் திருவடிகளை, வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி - மெய்மொழிகள் சிறந்த நாவினை யுடையோய் நின் திருவடிகளை, நரகர்துயர் கெட நடப்போய் நின் அடி-நிரயத்திலிருப்போர்களின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச்சென்றோய் நின் திருவடிகளை, உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி - நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற ஆயிழை முன்னர்-வணங்குதலேயன்றி வாழ்த்துதல் எனது நாவின்கண் அடங்காது என்று பரவிய மணிமேகலையின் முன்னர் ;

பாத்திரம் பெற்ற மகிழ்ச்சியாலும் அன்பின் ஆராமையினாலும் நின்னடி'' என்பதனைப் பலகால் அடுக்கிக் கூறினளாயினும், வீர, கடிந்தோய்